[X] Close

குருப்பெயர்ச்சி : பூர நட்சத்திரத்துக்கான பலன்கள்


gurupeyarchi-pooram

  • kamadenu
  • Posted: 29 Sep, 2018 21:33 pm
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

பூரம்:

கிரகநிலை:   

04-10-2018 அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் உங்களின் ஆறாவது நட்சத்திரமான விசாக நட்சத்திரத்தின் 3ம் பாதத்த்தில் இருந்து 4ம் பாதத்திற்கு மாறுகிறார்.

பலன்:

சுக்கிர பகவானை நட்சத்திர நாயகனாகக் கொண்ட பூர நட்சத்திர அன்பர்களே!

இந்த குருப்பெயர்ச்சியால் வாழ்வில் நிறைய அனுபவங்களை சந்திக்கப் போகிறீர்கள். பலரின் நட்பும் உங்களுக்கு கிடைத்து அதில் நல்ல செயல்களைச் செய்து நிரூபிக்கப் போகிறீர்கள். குடும்பத்தில் திருமணத்திற்காக நீண்ட நாட்களாக காத்திருந்தவர்களுக்கு நல்ல வரன் அமையும். நீங்கள் எதிர்பார்த்திருந்ததை விட சிறப்பான வாழ்க்கை அமையும்.

தொழிலில் உங்களின் உயர்வு சிறப்பாக இருக்கும். தைரியமாக எதையும் கையாளுவீர்கள். மனதுக்குள் ஒரு இலக்கை வைத்து அதை நோக்கி ஓடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு, மேலிடம் உங்களின் மேல் வைத்திருந்த தவறான எண்ணத்தை மாற்றிக்கொள்ள வாய்ப்புகள் அமையும்.

பெண்களுக்கு நஷ்டத்தில் தொழில் செய்தவர்களுக்கு லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த தொல்லைகள் அகலும். மாணவர்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உங்கள் திறமையை வெளிக்காட்டுவீர்கள்.

உங்களுக்கு 65% நல்ல பலன்கள் கிடைக்கும்.

+ பொருளாதாரத்தில் ஏற்றம்

- உடல்நலத்தில் கவனம் தேவை

பரிகாரம்:

தினமும் சிவபெருமானை வழிபட்டு நந்தி தேவரையும் தரிசனம் செய்யுங்கள். பிரதோஷ வழிபாடு செய்வது கூடுதல் பலனைத் தரும்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: சூரியன், சுக்கிரன், குரு

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்;

திசைகள்: மேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: சிவப்பு, நீலம்

எண்கள்: 1, 3, 6

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close