[X] Close

குருப்பெயர்ச்சி : மகம் நட்சத்திரத்துக்கான பலன்கள்


gurupeyarchi-maham

  • kamadenu
  • Posted: 29 Sep, 2018 21:23 pm
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மகம்:

கிரகநிலை:

04-10-2018 அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் உங்களின் ஏழாவது நட்சத்திரமான விசாக நட்சத்திரத்தின் 3ம் பாதத்த்தில் இருந்து 4ம் பாதத்திற்கு மாறுகிறார்.

பலன்:

கேது பகவானை நட்சத்திர நாயகனாகக் கொண்ட மக நட்சத்திர அன்பர்களே!

இந்த குருப்பெயர்ச்சியால் உங்களுக்கு பாக்கியத்திற்கு குறைவிருக்காது. முக்கிய நிகழ்வுகளில் நீங்கள்தான் முக்கியஸ்தர்களாக இருப்பீர்கள். குடும்பத்தில் ஐஸ்வர்யத்துக்குக்  குறைவிருக்காது. திருமண யோகம்,. குழந்தை பாக்கியம், புது மனை வாங்குதல், வாகனம் வாங்குதல் முதலான சுப காரியங்கள் வரிசையாக நடக்கும். பண வரவு சீராக இருக்கும் என்பதால் அவற்றை சரியான முறையில் முதலீடு செய்யுங்கள். பிற்காலத்திற்கு உதவியாக இருக்கும்.

தொழிலில் சிறப்பான லாபத்தை அடையப் போகிறீர்கள். சரியான முறையில் முதலீடு செய்வீர்கள், உங்கள் லாபம் இரட்டிப்பாகும். சோம்பல் இன்றி உழைக்கும் எண்ணம் தோன்றும். இதனால் உற்பத்தி அதிகமாகும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலிடத்துடன் இருந்த வந்த சில சச்சரவுகள் முடிவுக்கு வரும். பெண்களுக்கு கணவனுடன் இருந்துவந்த சில மனக்குழப்பங்கள் தீரும். மனதில் உற்சாகம் பிறக்கும்.

உங்களுக்கு 65% நல்ல பலன்கள் கிடைக்கும்.

+ புதியதாக இடம் வாங்குவீர்கள்

- அலைச்சல் அதிகரிக்கும்

பரிகாரம்:

தினமும் சூர்யபகவானை வழிபாடு செய்யுங்கள். சூரிய நமஸ்காரம் செய்யுங்கள். முடியும்போதெல்லாம் ஆதித்ய ஹ்ருத்யம் பாராயணம் செய்யுங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: சூரியன், செவ்வாய், குரு

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி;

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு

நிறங்கள்: சிவப்பு, பச்சை

எண்கள்: 5, 6, 9

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close