[X] Close

குருப்பெயர்ச்சி : ஆயில்யத்துக்கான பலன்கள்


gurupeyarchi-aayilyam

  • kamadenu
  • Posted: 29 Sep, 2018 21:16 pm
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ஆயில்யம்:

கிரகநிலை:   

04-10-2018 அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் உங்களின் எட்டாவது நட்சத்திரமான விசாக நட்சத்திரத்தின் 3ம் பாதத்த்தில் இருந்து 4ம் பாதத்திற்கு மாறுகிறார்.

பலன்:

புதன் பகவானை நட்சத்திர நாயகனாகக் கொண்ட  ஆயில்ய நட்சத்திர அன்பர்களே!

இந்த குருப்பெயர்ச்சியால் அனைவராலும் பாராட்டப் படுவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதால்  மனதிற்கு மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்களில் இருந்து வந்த தடைகள் நீங்கும். ஆன்மிகத் தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவது மனதுக்கு  மகிழ்ச்சி அளிக்கும்.

குடும்பத்தில் இருக்கும் மூத்தவர்கள் கூறும் அறிவுரையைக் கேட்டுக் கொள்ளுங்கள். தொழில் செய்பவர்கள் கடல் தாண்டி சென்று வியாபாரம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு மேலிடம் உங்களை நம்பி சில முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். அவற்றை சிறப்பாக செய்வதன் மூலம் உங்கள் முக்கியத்துவம் அனைவருக்கும் தெரியவரும்.

பெண்களுக்கு குடும்பத்தில் உங்களைப் புரிந்து நடந்து கொள்வது உங்களுக்கு ஆறுதலாக இருக்கும். உங்கள் குழந்தைகளுக்குத் தேவையானதை செய்து கொடுத்து மகிழ்ச்சியடைவீர்கள்.

உங்களுக்கு 80% நல்ல பலன்கள் கிடைக்கும்.

+ குடும்பத்தில் மரியாதை கூடும்.

- நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும்.

பரிகாரம்:

தினமும் அம்பாளை வெள்ளை மலர் கொண்டு வழிபடவும். ஸ்ரீலலிதாம்பிகையைப் போற்றி வழிபடுங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், புதன், குரு

அதிர்ஷ்ட கிழமைகள்:  வியாழன், வெள்ளி

திசைகள்: கிழக்கு, வடகிழக்கு

நிறங்கள்: மஞ்சள்

எண்கள்: 2, 3, 6

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close