[X] Close

குருப்பெயர்ச்சி : பூசத்துக்கான பலன்கள்


gurupeyarchi-poosam

  • வி.ராம்ஜி
  • Posted: 29 Sep, 2018 21:06 pm
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

பூசம்:

கிரகநிலை:

04-10-2018 அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் உங்களின் ஒன்பதாவது நட்சத்திரமான விசாக நட்சத்திரத்தின் 3ம் பாதத்த்தில் இருந்து 4ம் பாதத்திற்கு மாறுகிறார்.

பலன்:

சனி பகவானை நட்சத்திர நாயகனாகக் கொண்ட பூச நட்சத்திர அன்பர்களே!

இந்த குருப்பெயர்ச்சி பெண்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். அவர்கள் விருப்பம் நிறை வேறும். குடும்பத்தில் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் ஆலோசித்து முடிவு செய்வீர்கள்.  குடும்பத்துடன் வெளியூர் பயணம் சென்று வருவீர்கள். பெரியவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

உங்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு இந்த குருப் பெயர்ச்சி சிறந்த அடிக்கல்லாக இருக்கும். தொழிலில் உழைப்புக்கேற்ற பிரதிபலனுக்காக போராட்டங்களைச் சந்தித்த நீங்கள் தற்போது அதற்கான பலனை பெறப்போகிறீர்கள். உத்தியோகஸ்தர்கள் உங்களின் உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று இதுவரை நீங்கள் அடைந்த மனக்கஷ்டம் இனி தீரும். உங்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். பயணம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கவலை வேண்டாம்.

உங்களுக்கு 75% நல்ல பலன்கள் கிடைக்கும்.

+ பணம் வரவு நன்றாக இருக்கும்.

- வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது மிகவும் கவனம் தேவை

பரிகாரம்: கந்த சஷ்டி கவசம் தினமும் சொல்லி வாருங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், செவ்வாய், குரு

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வெள்ளி

திசைகள்: வடக்கு, தென்மேற்கு

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்

எண்கள்: 1, 6, 9

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close