[X] Close

குருப்பெயர்ச்சி : புனர்பூசத்துக்கான பலன்கள்


gurupeyarchi-punarpoosam

  • வி.ராம்ஜி
  • Posted: 29 Sep, 2018 20:54 pm
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

புனர்பூசம்:

கிரகநிலை:   

04-10-2018 அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் உங்களின் பத்தாவது நட்சத்திரமான விசாக நட்சத்திரத்தின் 3ம் பாதத்த்தில் இருந்து 4ம் பாதத்திற்கு மாறுகிறார்.

பலன்:

குரு பகவானை நட்சத்திர நாயகனாக கொண்ட புனர்பூச நட்சத்திர அன்பர்களே!

இந்தக் குருப்பெயர்ச்சி உங்கள் முக்கியத்துவத்தை மற்றவர்களுக்குக் காட்டும் விதமாக அமையும். குடும்பத்தில் அனைவரும் உங்களை மதித்து, உங்கள் பேச்சுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி  மகிழ்வீர்கள். தொழிலில் இதுவரை இருந்த தடைகள் விலகும். நீங்கள் உங்கள் தொழிலின் உச்சத்தை அடைய வழி வகுக்கும். உத்தியோகஸ்தர்கள் உங்களின் பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றத்திற்காக நீண்ட நாட்களாக காத்திருந்திருப்பீர்கள். அவை இப்போது உங்களுக்கு விரும்பியபடியே கிடைக்கும்.

பெண்களுக்கு நிம்மதியான காலகட்டமாக இருக்கும். சரியான நேரத்தில் உறங்காமல் தவித்து வந்த காலகட்டங்கள் மாறும். பயணம் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடைகள் அகலும். சிலர் பாதியில் நிறுத்திய படிப்பைத் தொடரவும் வாய்ப்பு கிடைக்கும்.

உங்களுக்கு 60% நல்ல பலன்கள் கிடைக்கும்.

+ ஆன்மிக நாட்டம் உண்டாகும்.

- வீண் அலைச்சல் ஏற்படலாம்.

பரிகாரம்: தினமும் ஸ்ரீராமரை வணங்க ஏற்றம் உண்டாகும். சுந்தரகாண்டம் படியுங்கள். காரிய வெற்றி உண்டு.

அதிர்ஷ்ட ஹோரைகள்: புதன், குரு, சுக்ரன்

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன், வெள்ளி

திசைகள்: மேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: சிவப்பு, வெள்ளை

எண்கள்: 3, 5, 6

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close