[X] Close

குருப்பெயர்ச்சி : திருவாதிரைக்கான பலன்கள்


gurupeyarchi-thiruvathirai

  • kamadenu
  • Posted: 29 Sep, 2018 20:44 pm
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

திருவாதிரை:

கிரகநிலை:   

04-10-2018 அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் உங்களின் பதி்னொன்றாவது நட்சத்திரமான விசாக நட்சத்திரத்தின் 3ம் பாதத்த்தில் இருந்து 4ம் பாதத்திற்கு மாறுகிறார்.

பலன்:

ராகு பகவானை நட்சத்திர நாயகனாக கொண்ட திருவாதிரை நட்சத்திர அன்பர்களே!

இந்த குருப் பெயர்ச்சியால் தொழிலால் நன்மை நடக்கும் என்பதில் ஐயமில்லை. குடும்பத்தில் மூத்த மற்றும் இளைய சகோதர சகோதரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அவர்களுடன் இருந்து வந்த சச்சரவுகள் சமாதானத்தில் முடியும்.

பூர்வீகச் சொத்துக்களில் இருந்த தடைகள் அனைத்தும் மாறும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். தொழிலில் நண்பர்களுடன் சேர்ந்து தொழில் செய்து கொண்டிருந்தாலும், அல்லது மூத்த சகோதரர்களுடன் தொழில் செய்து கொண்டிருந்தாலும் நல்ல லாபத்தைக் குரு பகவான் கொடுப்பார்.

உத்தியோகஸ்தர்களுக்கு பண விஷயங்கள் சீராகும். அடிக்கடி விடுப்பு எடுக்காமல் வேலையை செவ்வனே செய்து முடித்து நற்பெயர் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும்.  உடலுக்கு அவ்வப்போது மருத்துவச் செலவுகள் தேவையில்லாமல் வந்து கொண்டுதான் இருக்கும். உடனே கவனித்தால் பெரிய பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கலாம்.

உங்களுக்கு 60% நல்ல பலன்கள் கிடைக்கும்.

+ பணவரவு திருப்தி தரும்

- வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும்

பரிகாரம்: தக்ஷிணாமூர்த்திக்கு எலுமிச்சை சாதம்  நைவேத்தியம் செய்து வணங்குங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: செவ்வாய், புதன், சுக்ரன்

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி

திசைகள்: வடக்கு, வடமேற்கு

நிறங்கள்: சிவப்பு, பச்சை

எண்கள்: 1, 5, 6

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close