[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 29 Sep, 2018 08:45 am
  • அ+ அ-

மேஷம்: கணவன் - மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சந்தோஷம் நிலைக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். தடைபட்ட வேலைகள் முடியும்.

ரிஷபம்: சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். அடுத்தவர் விவகாரத்தில் தலையிடாதீர்கள்.

மிதுனம்: பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். உடல்நலம் திடீரென பாதிக்கக் கூடும். அக்கம்பக்கத்தில் உள்ள சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம்.

கடகம்: அதிரடியாகச் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பழைய கடனைப் பைசல் செய்ய வழி பிறக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். விருந்தினர் வருகை உண்டு.

சிம்மம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் துடிப்புடன் செயல்படுவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கியமான பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.

கன்னி: காரியத் தடை, தாமதங்கள் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பழைய பிரச்சினைகளை சுமுகமாகத் தீர்ப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களால் அனுகூலம் உண்டு.

துலாம்: செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. சிலர் உதவுவதைப் போல் உபத்திரவம் தருவார்கள்.

விருச்சிகம்: தன் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். சகோதரர் வகையில் பயனடைவீர்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும்.

தனுசு: பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

மகரம்: நீண்டநாள் கனவு நனவாகும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புண்ணியத்தலம் சென்று வருவீர்கள்.

கும்பம்: அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். தாயாருடன் எதிர்பாராது கருத்துமோதல்கள் வரக்கூடும். புது வேலை கிடைக்கும்.

மீனம்: சவாலில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close