குருப்பெயர்ச்சி : மிருகசீரிஷத்துக்கான பலன்கள்

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மிருகசீரிஷம்:
கிரகநிலை:
04-10-2018 அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் உங்களின் பன்னிரெண்டாவது ட்சத்திரமான விசாக நட்சத்திரத்தின் 3ம் பாதத்த்தில் இருந்து 4ம் பாதத்திற்கு மாறுகிறார்.
பலன்:
செவ்வாய் பகவானை நட்சத்திர நாயகனாக கொண்ட மிருகசீரிஷ நட்சத்திர அன்பர்களே!
இந்த குருபெயர்ச்சியைப் பொருத்தவரை நீண்டநாட்களாக இருந்த கடன்களை அடைப்பீர்கள். குடும்பத்தில் ஆடை, ஆபரணம், வாகனம் முதலான நீங்கள் எதிர்பார்த்திருந்த அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும்.
திருமணத் தடை நீங்கும். புது வீடு, மனை வாங்குவீர்கள். உறவினர்கள் உங்களைத் தேடி வருவார்கள். குடும்பத்தில் முடிவுகளை நீங்கள் எடுக்க வேண்டி வரலாம். தொழில் - வியாபாரத்தில் ஏற்றுமதி - இறக்குமதி தொழிலில் நல்ல லாபத்தைக் காண முடியும்.
உத்தியோகஸ்தர்களுக்கு நிலுவையில் இருந்த பாக்கி வசூலாகும். மாணவர்களுக்கு நட்பு வட்டாரம் அதிகரிக்கும். அரசியல்துறையினர் தானுண்டு தன் வேலையுண்டு என்று உங்கள் கடமைகளை மட்டும் செய்து வருவீர்கள். கலைத்துறையினருக்கு மூத்த கலைஞர்கள் உங்கள் பெயரை முன்மொழிவார்கள்.
உங்களுக்கு 80% நல்ல பலன்கள் கிடைக்கும்.
+ பதவி உயர்வு கிடைக்க பெறலாம்.
- குழந்தைகள் பற்றிய கவலை உண்டாகும்
பரிகாரம்: நவக்கிரகத்தில் உள்ள குருபகவானுக்கு நெய் தீபமேற்றுங்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஆலயம் சென்று நவக்கிரகம் சுற்றிப் பிரார்த்தனை செய்யுங்கள்.
அதிர்ஷ்ட ஹோரைகள்: செவ்வாய், சுக்கிரன்
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி
திசைகள்: கிழக்கு, தென்மேற்கு
நிறங்கள்: சிவப்பு, வெள்ளை
எண்கள்: 1, 6, 9