[X] Close

குருப்பெயர்ச்சி : ரோகிணிக்கான பலன்கள்


gurupeyarchi-rohini

ரோகிணி நட்சத்திரப் பலன்கள்

  • kamadenu
  • Posted: 28 Sep, 2018 23:15 pm
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ரோஹிணி:

கிரகநிலை:   

04-10-2018 அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் உங்களின் பதின்மூன்றாவது நட்சத்திரமான விசாக நட்சத்திரத்தின் 3ம் பாதத்த்தில் இருந்து 4ம் பாதத்திற்கு மாறுகிறார்.

பலன்:

சந்திரனை நட்சத்திர நாயகனாகக் கொண்ட ரோகிணி நட்சத்திர அன்பர்களே!

இந்த குருப்பெயர்ச்சியால் குடும்ப நிம்மதியும், லாபமும் அமையப் பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்த மனக் குழப்பங்கள் அனைத்தும் முடிவுக்கு வரும். உங்களை அவமானப் படுத்தியவர்கள் எல்லாம் உங்களை ஆச்சரியமுடன் பார்க்கும் காலமாக இது இருக்கும். அதைப் பயன்படுத்தி உங்கள் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வீர்கள்.  

தொழிலைப் பொருத்தவரை  இதுவரை இருந்து வந்த மந்தநிலையில் இனி ஓரளவிற்கு முன்னேற்றத்தை காணலாம். ஆர்டர் இல்லை என்று திருப்பி அனுப்பிய அனைவரும் உங்களைக் கூப்பிட்டு புதிய ஆர்டர்களைக் கொடுப்பார்கள்.

உத்தியோகத்தில் சிறிது மந்த நிலை காணப்பட்டாலும் பதவி உயர்வுக்கான தேர்வுகளில் வெற்றி பெற்று பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கப் பெறுவீர்கள். சிலருக்குத் திருமண வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும்.

உங்களுக்கு 80% நல்ல பலன்கள் கிடைக்கும்.

+ வீண்செலவு குறையும்.

- பண விஷயங்களில் கவனம் தேவை.

பரிகாரம்:

வியாழக்கிழமை தோறும் குருபகவானுக்கு கொண்டைக்கடலை மாலை அணிவியுங்கள். திட்டை, திருவலிதாயம், ஆலங்குடி முதலான குரு ஸ்தலங்களுக்குச் சென்று தரிசியுங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், சுக்கிரன், குரு

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

திசைகள்: வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

எண்கள்: 2, 6

 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close