[X] Close

குருப்பெயர்ச்சி : பரணிக்கான பலன்கள்


gurupeyarchi-barani

  • kamadenu
  • Posted: 28 Sep, 2018 23:07 pm
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

பரணி:

கிரகநிலை:

04-10-2018 அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் உங்களின் பதினைந்தாவது நட்சத்திரமான விசாக நட்சத்திரத்தின் 3ம் பாதத்த்தில் இருந்து 4ம் பாதத்திற்கு மாறுகிறார்.

பலன்:

சுக்கிரனை நட்சட்த்திர நாயகனாகக் கொண்ட பரணி நட்சத்திர அன்பர்களே,

இந்த குருப் பெயர்ச்சியால் உங்களுக்குத் தொழிலில் ஏற்றம் உண்டு. குடும்பத்தில் யாருக்கேனும் உடல்நிலையில் தொய்வு இருந்திருந்தால், அவர்கள் முன்னேற குரு பகவான் அருள்புரிவார். கவலைப்படாதீர்கள்.

தந்தையாருடன் இருந்து வந்த சில கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். தொழிலில் இருந்த தடைகள் நீங்கும். உங்களை ஏமாற்றுபவர்களைக் கண்டறிவீர்கள். ஒரு விஷயத்தில் பணத்தை முதலீடு செய்யும் முன்பு யோசித்து செயல்படும் எண்ணம் தோன்றும்.

உத்தியோகஸ்தர்களுக்கு இந்த குருப் பெயர்ச்சி மகிழ்ச்சி தரக்கூடியதாகவே இருக்கும். வேலையில் இதுவரை இருந்து வந்த தடைகள் விலகும். முழு மனதுடன் வேலையில் ஈடுபடுவீர்கள். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும்.

மதிப்பெண்கள்:  உங்களுக்கு 65% நல்ல பலன்கள் கிடைக்கும்.

+ சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.

- வீண் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம்.

பரிகாரம்:

வெள்ளிக்கிழமைதோறும் பெருமாள் கோயிலிலுள்ள சக்கரத்தாழ்வாரை பதினொருமுறை வலம் வரவும். முடியும்போதெல்லாம் துளசி மாலை சார்த்தவும்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: சுக்கிரன், செவ்வாய்

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

திசைகள்: தெற்கு, தென்மேற்கு

நிறங்கள்: சிவப்பு, வெள்ளை

எண்கள்: 5, 6

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close