[X] Close

குருப்பெயர்ச்சி : கிருத்திகைக்கான பலன்கள்


gurupeyarchi-krithigai

  • kamadenu
  • Posted: 28 Sep, 2018 22:54 pm
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஐயர்

கிருத்திகை:

கிரகநிலை:

04-10-2018 அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் உங்களின் பதினான்காவது நட்சத்திரமான விசாக நட்சத்திரத்தின் 3ம் பாதத்த்தில் இருந்து 4ம் பாதத்திற்கு மாறுகிறார்.

பலன்:

சூரியனை நட்சத்திர நாயகனாகக் கொண்ட கிருத்திகை நட்சத்திர அன்பர்களே!

இந்த குருப் பெயர்ச்சியால் தந்தைக்கும் உங்களுக்கும் இருந்த பகைமை உணர்வு மாறும். தொழிலிலும் ஏற்றம் உண்டாகும். குடும்பத்தில் தந்தை வழி உறவினர்களால் இருந்த சில பிரச்சினைகள் அகலும். சிலருக்கு தந்தையின் உடல் நிலையில் பிரச்சினைகள் இருந்திருக்கும். அதிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

தொழில் செய்பவர்கள் காரியங்களை நீங்களே முன்னின்று நடத்துவதால் இடைத்தரகர்களால் ஏற்படும் விரயத்தையும் குறைக்கலாம். புதிய தொழில் தொடங்குவதாக இருந்தாலும் அதிக முதலீடு செய்யாமல் தொடங்குவதற்கான சூழல் உருவாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு நிம்மதியாக வேலை செய்யும் சூழல் உருவாகும். உங்கள் வாய் சாமர்த்தியத்தால் சில காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். நீங்கள் விரும்பிய பதவி உயர்வு, பணி இடமாற்றம் முதலான அனைத்தும் கிடைக்கும்.

மதிப்பெண்கள்:  உங்களுக்கு 65% நல்ல பலன்கள் கிடைக்கும்.

+ மனக்குழப்பம் தீரும்.

- வீண் சண்டைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கவனம் தேவை.

பரிகாரம்:

மாதந்தோறும் கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப் பெருமானுக்கு அரளி மாலை சார்த்தி வழிபடுங்கள். கந்த சஷ்டி கவசம் படியுங்கள். செவ்வாய்க்கிழமைகளில் அருகில் உள்ள முருகன் கோயிலுக்கோ, சிவாலயத்தில் உள்ள முருகன் சந்நிதியிலோ வணங்கி வழிபடுங்கள். இன்னும் கூடுதல் பலன்களைப் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: சூரியன், செவ்வாய், குரு

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

திசைகள்: மேற்கு, வடமேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: நீலம், பச்சை

எண்கள்: 1, 5, 6

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close