[X] Close

குருப்பெயர்ச்சி : அஸ்வினிக்கான பலன்கள்


gurupeyarchi-aswini

  • kamadenu
  • Posted: 28 Sep, 2018 22:11 pm
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

அசுபதி:

கிரகநிலை:

04-10-2018 அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் உங்களின் பதினாறாவது நட்சத்திரமான விசாக நட்சத்திரத்தின் 3ம் பாதத்தில் இருந்து 4ம் பாதத்திற்கு மாறுகிறார்.

பலன்:

கேதுவை நக்ஷத்திர நாயகனாகக் கொண்ட அசுபதி நட்சத்திர அன்பர்களே!

இந்த குருப் பெயர்ச்சியால் பொதுவாக வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வெளியிடங்களில் செல்வாக்கு உயரும். குடும்பத்தில்  சகோதர சகோதரிகளுக்கு இதுவரை தடைபட்டிருந்த காரியங்கள் அனைத்தும் நடந்தேறும்.

திருமணத் தடை, குழந்தை பாக்கியத்தில் தடை முதலானவை அகலும்.  சுப காரியங்கள்  அனைத்தும் இனிதே நடந்தேறும். வீட்டுக்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் சில நஷ்டங்களையும் நலிவுகளையும் இதுவரை சந்தித்திருப்பீர்கள். இதுவரை விரயமான பணம் உங்கள் கைக்குத் திரும்பக் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு இதுவரை வரவேண்டிய பணம் வந்து சேரும். ஊதிய உயர்வுடன் கூடிய பணி இடமாற்றம் அல்லது பதவி உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள்.  

 

மதிப்பெண்கள்:  உங்களுக்கு 60% நல்ல பலன்கள் கிடைக்கும்.

 

+: பொருளாதார முன்னேற்றம் உண்டு

-: வாக்கு கொடுக்கும் போது கவனமாக இருங்கள்.

பரிகாரம்:

தினமும் விநாயகரை வழிபட்டு காரியத்தைத் துவங்குங்கள். சங்கடஹர சதுர்த்தியில் அவசியம் விநாயகரைத் தரிசியுங்கள். அருகம்புல் மாலை சார்த்துங்கள். வெள்ளெருக்கு மாலை இன்னும் விசேஷ பலன்களை வாரி வழங்கும்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: செவ்வாய், சூரியன்

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய், வெள்ளி;

திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்

எண்கள்: 3, 7, 9

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close