[X] Close

குருப்பெயர்ச்சி பலன்கள் - ஓர் பார்வை


gurupeyarchi-2018-paarvai

திட்டை குரு பகவான்

  • kamadenu
  • Posted: 28 Sep, 2018 21:52 pm
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

நவக்கிரகங்களில் முழு சுபக்கிரகம் குரு. அனைத்து வித செல்வங்களையும் தந்தருள்பவர் குரு. சப்தரிஷிகளில் ஆங்கிரஸ முனிவரின் மைந்தன் பிரகஸ்பதி. இவரே குரு. குரு பகவான். நவக்கிரகங்களில் குருவாக இருப்பவர் இவரே! குருப்பெயர்ச்சியாவதும் இவரேதான்!

இவர் தேவர்களுக்கு எல்லாம் குரு. தேவகுரு. நம் வாழ்வில் இரண்டு விஷயங்கள் மிக மிக முக்கியம். அதாவது தனம் என்று சொல்லக்கூடிய பணம். 2-வது புத்திர சம்பத்து என்று சொல்லக்கூடிய குழந்தைச் செல்வம். இந்த இரண்டையும் அளிக்கக் கூடிய சர்வ வல்லமை பெற்ற கிரகம்தான் குரு.

குருபகவான் மேலும் பல்வேறு விதமான ஆதிக்கங்களைச் செலுத்த வல்லவர்.  ஞானம், கூர்ந்த மதிநுட்பம், மந்திரி யோகம், நிதித்துறை, நீதித்துறை, வங்கி, கல்வி, வேத உபதேசம் முதலானவை எல்லாம் எல்லாம் குருவின் அதிகாரத்துக்கு உட்பட்டவை. அவரது அருள் இருந்தால் இந்தத் துறைகளில் பிரகாசிக்கலாம். அவரின் அருள் இருந்தால்தான் இந்தத் துறைகளில் பிரகாசிக்கமுடியும்.

குரு பார்வை அல்லது வியாழ அனுகூலம்:

நம் வாழ்வில் சுபநிகழ்ச்சிகள் ரொம்பவே முக்கியமானதுதானே. உதாரணமாக திருமணம் அனைவரின் வாழ்க்கையிலும் முக்கியமானது. திருமணத்துக்கு மிக முக்கிய கிரகமே குரு பகவான்தான். குரு பார்வை என்று சொல்லப்படும் வியாழ அனுகூலம் திருமணத்துக்கு முக்கியமாக தேவைப்படுகிறது. அதனால்தான் திருமணத்தை, வியாழ நோக்கம் என்பார்கள். வியாழ நோக்கம் வந்து விட்டதா என்று பார்த்த பிறகே திருமண விஷயங்களை ஆரம்பிக்க முடியும்.

குருவின் பலம்:

குரு எந்த ஸ்தானத்தைப் பார்க்கிறாரோ அந்த ஸ்தானம் பலமும், விருத்தியும் அடைகிறது. குரு பார்வை சர்வ தோஷ நிவர்த்தி என்று புகழ்ந்து போற்றப்படுகிறது. குருவுக்கு 5,7,9 ஆகிய பார்வைகள் உள்ளன. அதாவது குரு இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆகிய இடங்களைப் பார்வையிடுகிறார். ஐந்தாம் பார்வையும், ஒன்பதாம் பார்வையும் சிறப்புப் பார்வைகள். .

நிகழும் மங்களகரமான கலியுகாதி 5119 - சாலிவாகன சகாப்தம் 1940 - பசலி 1428 - கொல்லம் 1194ம் ஆண்டு ஸ்வஸ்தி்ஸ்ரீவிளம்பி வருஷம் தக்ஷிணாயனம் வருஷ ரிது புரட்டாசி மாதம் 18ம் நாள் இதற்குச் சரியான ஆங்கிலத் தேதி 04.10.2018 கிருஷ்ணபக்ஷ ஏகாதசியும் வியாழக்கிழமையும் ஆயில்ய நக்ஷத்திரமும் ஸித்தி நாமயோகமும் பத்ரை கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 40.00க்கு - இரவு 10.05க்கு குரு பகவான் துலா ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார். விருச்சிக ராசிக்கு வரும் குரு பகவான் தொடர்ந்து 1 வருட காலத்திற்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குவார். விருச்சிக ராசிக்கு வரும் குரு பகவான் தனுசு ராசிக்கு விகாரி வருடம் ஐப்பசி மாதம் 20ம் தேதி - 05.11.2018 - திங்கட்கிழமையன்று மாறுகிறார்.

தற்போது மாறக்கூடிய குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனது ஐந்தாம் பார்வையால் மீன ராசியையும் - ஏழாம் பார்வையால் ரிஷப ராசியையும் - ஒன்பதாம் பார்வையால் கடக ராசியையும் பார்க்கிறார். குரு பகவானுக்கு ஸ்தான பலத்தை விட த்ருக் பலமே அதிகம். அதாவது இருக்கும் இடத்தின் பலத்தை விட பார்க்கும் பலமே அதிகம். அதனால்தான் குரு பார்க்க கோடி நன்மை என்கிறோம். எனவே, குருவின் பார்வை பெறும் ராசிகள் பூரணமானப் பலன்களைப் பெறுகின்றன. .

பொதுவாக ராசிகள் பெறும் பலன்களின் அளவுகள்:

நன்மை பெறும் ராசிகள்: ரிஷபம் - கடகம் - மீனம்

நன்மை தீமை இரண்டும் கலந்து பலன்கள் பெறும் ராசிகள்: சிம்மம் - துலாம் - விருச்சிகம் - மகரம் - கும்பம்

பரிகாரத்தின் மூலம் பயன்பெறும் ராசிகள்: மேஷம் - மிதுனம் - கன்னி - தனுசு

 

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close