[X] Close

27 நட்சத்திரங்களுக்கும் குருப்பெயர்ச்சி எப்படி? - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் தரும் பலன்கள்!


perunkulam-jodhidar-gurupeyarchi

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

  • வி.ராம்ஜி
  • Posted: 27 Sep, 2018 12:57 pm
  • அ+ அ-

வருகிற அக்டோபர் 4ம் தேதி குருப்பெயர்ச்சி. இதையொட்டி, வருகிற 29.9.18 சனிக்கிழமை, காமதேனு இணையதளத்தில், துல்லியமாய் கணித்துச் சொல்லும் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர், 27 நட்சத்திரங்களுக்கும் உரிய குருப்பெயர்ச்சி பலன்களை வழங்குகிறார்.

குருவருள் இருந்தால்தான் திருவருளைப் பெறமுடியும் என்பது ஆன்றோரின் சத்தியவாக்கு. குருவின்றி ஓர் அணுவும் அசையாது. குருப்பெயர்ச்சியும் அவ்விதமே! வருடந்தோறும் வருகிற இந்த குருப்பெயர்ச்சி, இந்த முறை நமக்கு எப்படி இருக்கும் என்பதுதான் எல்லோரின் எதிர்பார்ப்பும்!

நன்றாக இருக்கவேண்டுமே என்பதுதான் நம்முடைய ஆசையும் ஏக்கமும்!

அக்டோபர் 4ம் தேதி நடைபெறும் குருப்பெயர்ச்சிக்கான பலன்களை, ராசி பலன்களாகத் தருவதுதான் வழக்கம். 12 ராசிகளுக்கும் பலன்கள் தருவார்கள். ஆனால், காமதேனு இணையதள வாசகர்களுக்காக, 27 நட்சத்திர வாரியாகவே பலன்கள் வழங்க இருக்கிறோம்.  

பலன்களைத் துல்லியமாகக் கணித்துச் சொல்லுவதில் வல்லவர் என்று நம் வாசகர்களால் போற்றப்படுகிறார் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்.

எந்த நட்சத்திரக்காரர்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சி என்னென்ன பலன்களைத் தரும், எந்த நட்சத்திரக்காரர்கள் பிரதோஷத்தின் போது சிவ தரிசனம் செய்யவேண்டியது அவசியம், நல்ல உத்தியோகம் கிடைக்க எந்த நட்சத்திரக்காரர்கள் என்ன பரிகாரங்கள் மேற்கொள்ளவேண்டும், இந்தக் குருப்பெயர்ச்சியால், எந்த நட்சத்திர அன்பர்களுக்கும் பெண்களுக்கும் மங்கல காரியங்கள் தடையின்றி நிகழும் என்பதையெல்லாம் மிகத் தெளிவாகவும் இனிமையாகவும் வழங்குகிறார் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்.

எளிமையான பரிகாரங்கள், ஆனால் பிரமாண்டமான பலன்கள்.

வருகிற சனிக்கிழமை 29.9.18 முதல் உங்களுக்காக... உங்களின் நட்சத்திரப் பலன்கள்... உங்கள் காமதேனு இணையதளத்தில்!

 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close