[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 27 Sep, 2018 09:21 am
  • அ+ அ-

மேஷம்: கைமாற்றாகக் கேட்டிருந்த பணம் கிடைக்கும். சொத்துப் பிரச்சினைகள் சுமுகமாகத் தீரும். அநாவசியமாக யாருக்காகவும் உறுதிமொழியோ, உத்தரவாதமோ தர வேண்டாம்.

ரிஷபம்:  சகோதரர் வகையில் பிரச்சினைகள் வந்து நீங்கும். இரத்த அழுத்தம் அதிகரிக்கக் கூடும். மனைவியுடன் எதிர்பாராத வகையில் கருத்துமோதல் வரும். பயணம் உண்டு.

மிதுனம்: நிர்வாகத் திறன் அதிகரிக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். பிள்ளைகளின் தனித் திறமைகளைக் கண்டறிந்து அவர்களை ஊக்குவிப்பீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

கடகம்: சவாலான காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். பிள்ளைகள் குடும்பச் சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள்.

சிம்மம்: சாதுர்யமாகச் செயல்பட்டு காரியங்களை முடிப்பீர்கள். முன்கோபம் விலகும். மனைவியுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள்.

கன்னி: கணவன் - மனைவிக்குள் ஈகோ பிரச்சினைகள் வந்து நீங்கும். வரவேண்டிய பணத்தைப் போராடி வசூலிப்பீர்கள். கடன் பிரச்சினையை நினைத்து அவ்வப்போது  கலங்குவீர்கள். 

துலாம்: மனப்போராட்டம், குழப்பம் நீங்கும். உறவினர்களின் ஆதரவு கிட்டும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் உற்சாகமடைவீர்கள். விருந்தினர்கள் வருகை உண்டு.

விருச்சிகம்: மறைமுக எதிரிகளைக் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். வேலைகள் தடையின்றி முடியும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள்.

தனுசு: திடீர் யோகம் உண்டாகும். சுபநிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். உறவினர்கள் உங்களைப் பற்றி பெருமையாகப் பேசுவார்கள். கலைப்பொருட்கள் சேரும்.

மகரம்: பிரபலங்கள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். பால்ய நண்பரை எதிர்பாராது சந்தித்து மகிழ்வீர்கள்.

கும்பம்: கோபம், பதட்டம் குறையும். தடைபட்ட அரசு வேலைகள் உடனே முடியும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். விலகியிருந்த பழைய சொந்தபந்தங்கள் தேடி வரும்.

மீனம்: புது முயற்சிகள் வெற்றியைத் தரும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். உறவினர்களால் அனுகூலம் உண்டு. கோயில் கும்பாபிஷேகத்துக்கு நன்கொடை வழங்குவீர்கள்.

 

 

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close