[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 26 Sep, 2018 09:01 am
  • அ+ அ-

மேஷம்: குடும்பத்துடன் ஆன்மிகப் பயணம் சென்று வருவீர்கள். குடும்ப விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும்.

ரிஷபம்: கடினமானக் காரியங்களையும் எளிதாக முடித்து விடுவீர்கள். பிரபலமானவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள்.

மிதுனம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளை தெரிந்து கொள்வீர்கள். வீடு கட்டும் பணியில் இருந்த தடைகள் விலகும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும்.

கடகம்: நவீன ரக வாகனம், டி.வி., ஃப்ரிட்ஜ் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்களால் ஆதாயம் கிடைப்பதுடன் கவுரவமும் ஒருபடி உயரும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும்.

சிம்மம்: குடும்பத்தில் உள்ளவர்களுடன் அவ்வப்போது சண்டை, சச்சரவுகள் ஏற்படும். எதிலும் பிடிப்பற்றப் போக்கு நிலவும். தர்மசங்கடமான சூழல்கள், செலவுகள் வந்து செல்லும்.

கன்னி: உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். விருந்தினர் வருகை உண்டு.

துலாம்: எதிர்ப்புகள், தடைகள் விலகும். உடல் ஆரோக்கியம் சீராகும். மனைவிவழி உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திடீர் பயணங்கள் ஏற்படக் கூடும்.

விருச்சிகம்: பிள்ளைகளின் தனித்திறமைகளைக் கண்டறிவீர்கள். வீடு கட்டுவது, வாங்குவது போன்ற முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். புது வாகனம் வாங்கி மகிழ்வீர்கள்.

தனுசு: உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். உறவினர்கள், நண்பர்கள் உங்களைக் கலந்தாலோசித்து முக்கிய முடிவுகள் எடுப்பார்கள்.

மகரம்: பணவரவு திருப்தி தரும். பழைய நகைகளை மாற்றி புதிய டிசைனில் நகைகள் வாங்குவீர்கள். நண்பர்கள் சிலரின் சுயரூபத்தைப் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள்.

கும்பம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். கடனை பைசல் செய்வீர்கள்.

மீனம்: ஒருவிதப் படபடப்பு, பயம், எதையோ இழந்ததைப்போல் கவலை வந்து செல்லும். எண்ணெய் பதார்த்தங்களைத் தவிர்ப்பது நல்லது. பால்ய நண்பரை எதிர்பாராது சந்திப்பீர்கள்.

 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close