[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 25 Sep, 2018 08:51 am
  • அ+ அ-

மேஷம்: திருமணம், சீமந்தம் போன்ற சுபச்செலவுகள் அதிகரிக்கும். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டு. வெளிவட்டாரத்தில் பேசும்போது நிதானம் அவசியம்.

ரிஷபம்: வங்கிக் கடன் கிடைக்கும். நவீன ரக ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்து கொள்வார்கள். 

மிதுனம்: சமயோசித புத்தியால் முன்னேறுவீர்கள். மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் நண்பர்கள் வட்டம் விரியும்.

கடகம்: வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். மகனுக்கு வெளிநாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை அமையும். சகோதரி உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்.

சிம்மம்: எதிர்மறை விமர்சனங்களும், தாழ்வு மனப்பான்மையும் வந்து போகும். பணம், நகையை கவனமாகக் கையாளுங்கள். கொஞ்சம் நிதானித்துச் செயல்படுவது நல்லது.

கன்னி: மனோபலம் அதிகரிக்கும். கடனாகக் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வீடு, வாகனத்தைச் சீர் செய்வீர்கள். அடகு நகையை மீட்பீர்கள். திடீர் பயணம் உண்டு.

துலாம்: பழைய இடத்தை விற்று, புது வீடு வாங்குவீர்கள். இழுபறியாக இருந்த வழக்கில் வெற்றி பெறுவீர்கள். மூத்த சகோதரர் வகையில் உதவிகள், ஆலோசனைகள் கிடைக்கும்.

விருச்சிகம்: வீட்டைப் புதுப்பிக்கத் திட்டமிடுவீர்கள். சிலர் வீடு மாறுவீர்கள். தூரத்து உறவினர்கள் தேடி வருவார்கள். தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

தனுசு: பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். பூர்வீகச் சொத்தை மாற்றுவீர்கள். தாயாரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். அயல்நாடு செல்வதற்கு விசா கிடைக்கும். 

மகரம்: தாயாரின் உடல்நலம் சீராகும். வீடு கட்ட அரசு அனுமதி கிட்டும். உறவினர்கள்  உங்களைப் புரிந்து கொண்டு வலிய வந்து உதவுவார்கள். கலைப்பொருட்கள் சேரும்

கும்பம்: வீடு, மனை வாங்குவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். சாமர்த்தியமாகப் பேசி காரியத்தைச் சாதிப்பீர்கள். விருந்தினர் வருகை உண்டு.

மீனம்: அநாவசியமாக யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வீண் சந்தேகம், தாழ்வு மனப்பான்மை வந்து நீங்கும். யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம்.

 

 

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close