[X] Close

குருவிக்கணக்கு!


yaman-kuruvikkanakku

எமதருமன் - ஸ்ரீவாஞ்சியம்

  • வி.ராம்ஜி
  • Posted: 24 Sep, 2018 18:35 pm
  • அ+ அ-

  எமதர்மராஜன் ஒரு குருவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார். அடடே... இந்த குருவிக்கு இப்படியொரு கேடு காலம் வந்துவிட்டதே என்பதை உணர்ந்தார் கருடபகவான். , உடனடியாக அந்தக்குருவியை தூக்கிக் கொண்டு பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்த ஒரு மரப்பொந்தில் பாதுகாப்பாக வைத்தார். .

 

  அந்த பொந்தில் பாம்பு ஒன்று வசித்து வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தக் குருவியை தடாலென்று விழுங்கிவிட்டது. குருவியைக் காப்பாற்ற நினைத்து அந்த குருவிக்கே எமனாகி விட்டோமே என்று வருந்தினார் கருடபகவான். 


 குருவி இறந்த துக்கத்துடன் மீண்டும் எமதர்மராஜன் இருந்த இடத்திற்கே திரும்பி வந்தார்.   அப்போது எமதர்மர், கருடபகவானை கூர்ந்து கவனித்தார்.


அதற்கு கருடபகவான், “நான் பகவான் விஷ்ணுவை முதுகில் சுமந்து செல்வதால் என்னை உம்மால் ஒன்றும் செய்ய முடியாது” என்று கோபத்தில் கத்தினார். 


   இதைக் கேட்ட எமதர்மர் கலகலவெனச் சிரித்தார். பிறகு கருடபகவானிடம், “நீங்கள் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டீர்கள். நான் அந்தக் குருவியை உற்று நோக்கக் காரணம், அந்த குருவி சில நொடிகளில் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் வசித்த ஒரு பாம்பின் வாயால் இறக்க நேரிடும் என எழுதப்பட்டிருந்தது; அது எப்படி நிகழப் போகிறது? என்பதை யோசித்துக் கொண்டு இருந்தேன். அதற்குள் விதிப்படியே நடந்து விட்டது என்று கூறினார்.


நம்முடைய வாழ்க்கையும் இப்படித்தான்.  வாழ்க்கையில் என்ன நடக்கவேண்டுமோ அது நிகழ்ந்தே தீரும். அதனால் அதுகுறித்துக் கவலை பட்டுக்கொண்டே இருக்காமல், செய்வதை திறம்பட சிறப்பாகச்  செய்வோம் என்பதே வாழ்வியல் நீதி!


இதுவே தர்மசாஸ்திரம் வலியுறுத்தும் வாழ்வியல் இலக்கணம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close