[X] Close

பித்ருக்களுக்கு எள்ளும் தண்ணீரும்!


mahalayam-spl

சிராத்தம் - பித்ரு ஆராதனை

  • வி.ராம்ஜி
  • Posted: 24 Sep, 2018 13:11 pm
  • அ+ அ-

பித்ருக்களை வழிபட   இந்த மகாளய பட்ச காலம் உகந்தது. இது அவர்களுக்கான காலம். இந்தக் காலகட்டத்தில், பித்ருக்களை நாம் வணங்கி ஆராதித்தால், வீட்டின் தரித்திரம் விலகும். குழந்தைகள் சத்விஷயங்கள் கிடைக்கப் பெறுவார்கள். குடும்ப ஒற்றுமை மேலோங்கச் செய்வார்கள் பித்ருக்கள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

 எல்லோர் வீடுகளிலும் இருந்துகொண்டு, நம்மை போஷிப்பதற்காகவே, போஷித்து காத்து வளர்ப்பதற்காகவே  தாய்- தந்தையரைப் படைத்து, அவர்களின் மூலமாக இந்த உலகுக்கு நம்மை அருளினார் கடவுள். அதனால்தான், நம்மை இந்த உலகுக்கு வழங்கி, சீராட்டிப் பாலூட்டி வளர்த்த பெற்றோரை, ‘தந்தை- தாய் பேண்’ என்றும், ‘நன்றி மறவேல்’ என்றும் சொல்லி, பெற்றோரைப் பராமரிப்பதை ஓர் அத்தியாவசியக் கடமையாகப் பணித்து வைத்தது இந்து தர்மம்.

  ஒரு மனிதன் இறந்த பிறகு, அவனது கர்ம வினைகளுக்கு ஏற்ப, சில காலங்களுக்குப் பிறகு மறுபிறவி எடுத்து, தன் கர்மவினைகளை நீக்கிக்கொள்ள முனைகிறான். வினைகள் யாவும் முழுவதுமாக நீங்கிய பிறகு, மோட்சத்தை அடைகிறான் என்கிறது இந்து தர்ம சாஸ்திரம்.

  ‘ஆத்மா வை புத்ர நாம ஆஸீத்’ என்கிறது வேதம். தாய்- தந்தையின் மற்றொரு வடிவமும் உருவமும்தான் நாம். அதேபோல, நாமே நம்முடைய குழந்தையாகவும் பிறக்கிறோம்; இருக்கிறோம். அதாவது, பெற்றவர்களின் பிரதியாக நாமும், நம்முடைய பிரதியாக குழந்தைகளும் என சங்கிலித் தொடர் போலானது மனிதப் பிறப்பு!

 நம் முன்னோர்கள் இந்த உலகை விட்டுச் சென்றாலும், அடுத்து வேறு பிறவி எடுத்தாலும், நம்மிலும் நம் சந்ததியிலும் அவர்களின் தொடர்பு இருப்பதால் நம் முன்னோர்களுக்கான நன்றியை, மரியாதையை, வணக்கத்தை, கடமையை சிராத்தம், தர்ப்பணம் முதலான சடங்காகச் செய்கிறோம். அப்போது, பித்ருக்களின் பசிக்கும் தாகத்துக்குமாக எள்ளும் தண்ணீரும் அர்ப்பணிக்கிறோம்..

மகாளய பட்ச புண்ணிய காலம் நாளை முதல் தொடங்குகிறது. எனவே இந்த நாட்களில், தர்ப்பணம் செய்வோம். முன்னோருக்கு எள்ளும் தண்ணீரும் வழங்கி, பசியாற்றுவோம்; தாகம் தணிப்போம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்! 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close