[X] Close

மகாளயபட்ச காலம் ஆரம்பம்; பித்ரு ஆராதனை மறக்காதீங்க!


mahalaya-patcham

  • வி.ராம்ஜி
  • Posted: 24 Sep, 2018 09:54 am
  • அ+ அ-

 புண்ணியம் நிறைந்த புரட்டாசி என்பார்கள். இந்தப் புரட்டாசியில்தான் மகாளயபட்சம் வருகிறது. தை அமாவாசை போல், ஆடி அமாவாசை போல், புரட்டாசி அமாவாசையும் உன்னதமானது. முக்கியமானது. தை, ஆடியைவிட புரட்டாசி அமாவாசை இன்னும் சிறப்பு. காரணம்... மகாளயபட்ச காலம் எனப்படும் அமாவாசைக்கு முந்தைய பதினைந்துநாட்கள்.

இந்த 15 நாட்கள் என்பது நாளையில் இருந்து (25.9.18) தொடங்குகிறது. அதாவது நாளை 25ம் தேதி, மகாளயபட்ச புண்ணிய காலம் தொடக்கம். இந்தப் பதினைந்து நாட்களும் தினமும் தர்ப்பணம் செய்யச் சொல்கிறது சாஸ்திரம்.

மாதந்தோறும் வருகிற அமாவாசை, கிரகண கால தர்ப்பணம், திவசகால தர்ப்பணம் என்று செய்தால் முன்னோர் எப்படி எடுத்துக்கொள்கிறார்களோ, இந்த மகாளயப் புண்ணிய காலத்தில், தினமும் செய்யப்படும் தர்ப்பணத்தால், ஆராதனையால் குளிர்ந்துபோகிறார்கள் முன்னோர் என்கிறது தர்மசாஸ்திரம்.

ஆகவே, நாளை செவ்வாய்க்கிழமை முதல் முன்னோர் ஆராதனையை மறக்காமல் செய்வோம். முன்னோர் எனப்படும் பித்ருக்களின் ஆசியும் கிடைக்கும். பித்ரு சாபத்தில் இருந்தும் நீங்கப்பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.  

குழந்தையாகவும் இருக்கிறோம். பிறகு பெற்றெடுத்தவர்களாக, பெற்றோராகவும் இருக்கிறோம். நாம், நம் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டிகளின் சாயல். நம் குழந்தைகளும் அப்படியே! நம் சாயல்களை அவர்களிடம் பார்க்கலாம். இந்தப் பிணைப்பு, இணைப்பு, வாழையடிவாழையென சங்கிலி பந்தம், சந்ததியெனப் பெருக்கெடுத்து தொன்றுதொட்டு வருகிறது. அதனால்தான், முன்னோரை வணங்கு மகாளய பட்ச புண்ணிய காலங்களையும் மகாளய அமாவாசையையும் மறக்காமல் பித்ரு வழிபாடு செய்யச் சொல்லி வலியுறுத்துகின்றனர் ஆச்சார்யப்பெருமக்கள்.

நாளை தொடங்கி ஒவ்வொருநாளும் தர்ப்பணம் செய்யவேண்டும். முடிந்தால், ஒருநாள் உணவு, இன்னொரு நாள் குடை, மறுநாள் யாரோ ஒருவருக்கு செருப்பு, வயோதிகருக்கு போர்வை, யாருக்கேனும் சட்டை அல்லது வேஷ்டி அல்லது இரண்டுமே... என உங்களுக்குத் தோன்றியதையெல்லாம் வழங்குங்கள். உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் மகாபுண்ணியம்!

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close