[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 24 Sep, 2018 09:07 am
  • அ+ அ-

மேஷம்: சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கிஅன்யோன்யம் பிறக்கும். அரசு காரியங்களில் இருந்த பின்னடைவு நீங்கும்.

**

ரிஷபம்: கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவீர்கள். முன்கோபம், டென்ஷன் விலகும்.தொடங்கிய காரியத்தில் இருந்த தடைகள் நீங்கி, வேலை விறுவிறுப்பாக நடக்கும்.

**

மிதுனம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசி அனைவரையும் கவர்வீர்கள். வீண், ஆடம்பர செலவுகளைக்குறைத்து, சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.

**

கடகம்: குடும்பத்தில் சிறு வார்த்தைகள்கூட பெரிய மோதலில் போய் முடியும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவைப் பயன்படுத்துவீர்கள். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும்.

**

சிம்மம்: குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். பிள்ளைகளின் உடல்நிலை சீராக இருக்கும். காசு,பணம் தேவையான அளவு இருக்கும். எதிலும் நிதானம் தேவை.

**

கன்னி: அடிமனதில் இருந்த பயம் விலகும். துணிச்சலுடன் செயல்பட்டு முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அலைச்சல் தந்த வேலைகளை உடனே முடிப்பீர்கள். பணவரவு அதிகரிக்கும்.

**

துலாம்: உங்கள் குறிக்கோளை எட்டிப்பிடிக்க முயற்சிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் அடிமனதில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்துகொள்வீர்கள்.

**

விருச்சிகம்: குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவு இருக்காது. பிள்ளைகளின் கோபம், அலட்சியப் போக்கு மாறும். பழைய நினைவுகள் நெஞ்சில் நிழலாடும். ஆன்மிக ஈடுபாடு உண்டாகும்.

**

தனுசு: எடுத்த வேலையை தடையின்றி முடிப்பீர்கள். மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். அரசுஅதிகாரிகளின் நட்பும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். வெளியூர் பயணத்தால் மகிழ்ச்சி கூடும்.

**

மகரம்: எப்பாடுபட்டாவது, சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். பணவரவு, பொருள் வரவு திருப்திகரமாக இருக்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உடல்நலம் சீராகும்.

**

கும்பம்: நண்பர்கள், உறவினர்களிடம் உரிமையில் வரம்பு மீறிப் பேச வேண்டாம். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தம் அடைவீர்கள். எடுத்த காரியங்கள் வெற்றிகரமாக நடக்கும்.

**

மீனம்: பல வேலைகளையும் நீங்களே இழுத்துப் போட்டு பார்க்க நேரிடும். உறவினர், நண்பர்கள் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். வெளி வட்டாரத்தில் நிதானம் அவசியம்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close