[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 23 Sep, 2018 07:55 am
  • அ+ அ-

மேஷம்: உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். சொத்து வாங்கும் முயற்சி பலிதமாகும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.

ரிஷபம்: மூளை பலத்தால் முன்னேறுவீர்கள். மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் நண்பர்கள் வட்டம் விரியும்.

மிதுனம்: அனுபவ அறிவால் கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். எதிர்பாராத இடத்தில் இருந்து பணவரவு உண்டு. பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள்.

கடகம்: சிறுசிறு அவமானம், வீண் விரையம் வந்து போகும். யாருக்காகவும் சாட்சி, ஜாமீன் கையெழுத்தி வேண்டாம். அக்கம்பக்கத்துடன் வீட்டாருடன் அளவாகப் பழகுங்கள்.

சிம்மம்: மனோபலம் அதிகரிக்கும். கடனாகக் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வீடு, வாகனப் பழுதைச் சீர் செய்வீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும்.

கன்னி: எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் கவுரவிக்கப்படுவீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

துலாம்: சுபநிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள். சொந்தபந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். கவுரவப் பதவிகள் தேடி வரும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும்.

விருச்சிகம்: நிர்வாகத் திறன் கூடும். ஓரளவு பணம் வரும். குடும்பத்தாரின் ஆதரவு அதிகரிக்கும். பிள்ளைகளின் அடிமனதிலிருக்கும் பயத்தை போக்குவீர்கள். பயணம் உண்டு.

தனுசு: வெளியூர் பயணங்கள் வெற்றிகரமாக அமையும். விலை உயர்ந்த சமையலறை சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேற்று மொழிக்காரர்கள் அறிமுகமாவார்கள்.

மகரம்: உங்கள் பேச்சில் கனிவு கூடும். பிரபலங்களின் உதவியால் காரியங்களை முடிப்பீர்கள். கைமாற்றாகக் கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.

கும்பம்: வேலைச்சுமை, நண்பர்களுடன் கருத்துவேறுபாடு வந்து நீங்கும். விருந்தினர்களின் வருகையால் வீட்டு செலவு கூடும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருக்கும்.

மீனம்: வீண் சந்தேகம், மறைமுக எதிர்ப்பு வந்து நீங்கும். தங்க ஆபரணங்களை இரவல் தர வேண்டாம். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள்.

 

 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close