[X] Close

சேலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்த தேரோட்டம்


women-pulling-a-chariot

சேலம் செவ்வாய்பேட்டை பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் பெண்கள் மட்டுமே கலந்து கொண்ட தேரோட்டம் நடைபெற்றது. இதில் தேரை வடம் பிடித்து இழுத்துச்சென்ற பெண்கள். படம்: எஸ்.குரு பிரசாத்

  • kamadenu
  • Posted: 22 Sep, 2018 14:48 pm
  • அ+ அ-

சேலம் செவ்வாய்ப்பேட்டை பிரசன்ன வெங்கடாஜலபதி கோயி லில் பிரம்மோற்ஸவ விழாவை முன்னிட்டு நடந்த தேரோட்டத்தில், பெண்கள் மட்டும் தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு நடத்தினர்.

சேலம் செவ்வாய்ப்பேட்டை பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் பிரம்மோற்ஸவ விழா கடந்த 12-ம் தேதி தொடங்கியது. புரட்டாசி மாதத்தை முன்னிட்டு நடந்து வரும் பிரம்மோற்சவ விழாவில் பெருமாள்-பூதேவி, தேவிக்கு சிறப்பு அலங்காரம், பூஜை, வீதி உலா நிகழ்ச்சிகள் தினமும் நடந்து வருகிறது.

பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் ஒன்பதாம் நாளான நேற்று அதிகாலை 4 மணிக்கு மூலவர் திருமஞ்சனம் நடந்தது. அதிகாலை 4.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியில், பெண்கள் மட்டும் பங்கேற்று திருத்தேரை முக்கிய வீதிகள் வழியாக வடம் பிடித்து இழுத்துச் சென்று, கோயில் நிலை சேர்த்தனர். மாலை 5 மணிக்கு திருமஞ்சனம், தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. இரவு 9 மணிக்கு கண்ணாடி மாளிகை சேவையில் ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு, இறைவழிபாட்டில் ஈடுபட்டனர்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close