[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 22 Sep, 2018 08:26 am
  • அ+ அ-

மேஷம்: எதிலும் வெற்றி கிடைக்கும். புதிய முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கு ஏற்பாடாகும். ஆன்மிகக் காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

ரிஷபம்: உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். பிரபலங்களின். துணையுடன் சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். நவீன ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

மிதுனம்: வீட்டை விரிவுப்படுத்துவது குறித்து முக்கிய முடிவு எடுப்பீர்கள். சிலருக்கு அரசுப் பதவிகள் கிடைக்கும். இழந்ததைப் பெறுவீர்கள். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.

கடகம்: ஆன்மிகப் பயணம் செல்வீர்கள். தியானம், யோகா இவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். உங்களிடமிருக்கும் அலட்சியப்போக்கால் சில சிக்கல்கள் வர வாய்ப்பிருக்கிறது. 

சிம்மம்: தடைபட்ட வேலைகள் முழுமையடையும். அரசு அதிகாரிகளின் உதவி கிடைக்கும். இடவசதியுடன் கூடிய வீட்டுக்கு குடிபுகுவீர்கள். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள்.

கன்னி: மறைமுக எதிரிகளைக் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவர். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும்.

துலாம்: தைரியம் பிறக்கும். மறைமுக எதிர்ப்புகளை சாதுர்யமாகச் சமாளித்து விடுவீர்கள். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். சொந்த ஊரில் மதிப்பு, மரியாதை கூடும்.

விருச்சிகம்: நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். தூக்கமின்மை விலகும். தாயாரின் உடல்நலம் பாதிக்கக் கூடும். பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள்.

தனுசு: இளைய சகோதரர்களால் ஆதாயம் பெறுவீர்கள். விரும்பியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வேற்று மதத்தவரால் நன்மை பிறக்கும். புது வாகனம் வாங்குவீர்கள்.

மகரம்: புதிய முயற்சிகளில் ஆர்வம் பிறக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பணம் இப்பொழுது வந்து உங்களுக்கு கைகொடுக்கும். கடன் பிரச்சினைகளைத் தீர்ப்பீர்கள்.

கும்ப:ம் உடல்நலக்குறை, மனச்சோர்வு, பதட்டம் வந்துபோகும். உடன்பிறந்தவர்களிடையே எதிர்பாராது மனக்கசப்புகள் வந்து நீங்கும். வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

மீனம்: சிலர் உங்கள் மீது வீண் பழி சுமத்துவார்கள். கோயில் விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள்.

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close