[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 21 Sep, 2018 08:37 am
  • அ+ அ-

மேஷம்: பெரிய பதவிக்கு ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வீண் குழப்பங்களிலிருந்து விடுபடுவீர்கள். தொட்ட காரியங்கள் துலங்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

ரிஷபம்: திருமணப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகளில் கவுரவிக்கப்படுவீர்கள்.

மிதுனம்: செலவுகளை சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களை மற்றவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

கடகம்: எதிலும் தெளிவு பிறக்கும். பழுதாகியிருந்த பழைய வாகனத்தை மாற்றி புது வாகனம் வாங்குவீர்கள். மகிழ்ச்சியான சம்பவங்கள் குடும்பத்தில் நிகழும். திடீர் பயணம் உண்டு.

சிம்மம்: முக்கிய காரியங்களில் தடைகள், பிரச்சினைகள் வந்தாலும் அவற்றை சாமர்த்தியாகச் சமாளித்து விடுவீர்கள். பிரபலமானவர்களால் சில வேலைகள் முடிவடையும்.

கன்னி: எல்லா வகையிலும் வெற்றி கிட்டும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். பெரிய மனிதர்கள் ஆதரவாக இருப்பார்கள். திடீர் பணவரவு உண்டு.

துலாம்: நண்பர்கள், உறவினர்களின் வருகையால் வீடு களைகட்டும். பழைய இனிய சம்பவங்களை அவ்வப்போது நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.

விருச்சிகம்: சமூகத்தில் உயர் அந்தஸ்தில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். மாநிலம் கடந்த பயணம் ஏற்படக் கூடும்.

தனுசு: எதிர்பார்ப்புகள் எவ்விதத் தடையுமின்றி நிறைவேறும். பணப் புழக்கம் சரளமாக இருக்கும். வாகனம் வாங்குவீர்கள். வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள்.

மகரம்: தாழ்வுமனப்பான்மையால் அவ்வப்போது சங்கடத்துக்கு ஆளாவீர்கள். யாரை நம்புவது என்ற குழம்பம் ஏற்படும். காசோலைகளைக் கையொப்பமிட்டு வைக்க வேண்டாம். 

கும்பம்: வேலைச்சுமை அதிகரிக்கும். எந்தக் காரியத்தைத் தொட்டாலும் தடங்களாகியே முடியும். மனச்சோர்வு ஏற்படும். எந்த ஒரு விஷயத்தையும் நேரடியாக முடிப்பது நல்லது.

மீனம்: மனைவிவழி உறவினர்களிடம் இருந்து மகிழ்ச்சிகரமான செய்திகள் வரும். சகோதரர் வகையில் உதவி கிடைக்கும். எங்கு சென்றாலும் மதிப்பு, மரியாதைக்கு குறைவிருக்காது.

 

 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close