[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 20 Sep, 2018 09:12 am
  • அ+ அ-

மேஷம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். சொந்தபந்தங்களின் சுயரூபத்தைத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவீர்கள். பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள்.

ரிஷபம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் உண்டாகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். திடீர் பயணம் உண்டு.

மிதுனம்: ஒரே நாளில் பல வேலைகளைப் பார்க்க வேண்டியது வரும். குடும்பத்தில் சின்னச் சின்ன விவாதங்கள் எதிர்பாராமல் வந்து போகும். விட்டுக் கொடுத்து போவது நல்லது.

கடகம்: தாயாரின் உடல்நிலை சீராகும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். எதிர்பாராத நன்மை உண்டாகும். பழைய சிக்கல்களுக்கு புதிய அணுகுமுறையில் தீர்வு காண்பீர்கள்.

சிம்மம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும்.

கன்னி: அவ்வப்போது புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.

துலாம்: தடைகளைக் கண்டு தளர மாட்டீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும்.

விருச்சிகம்: வீடு, வாகனத்தைச் சீர் செய்வீர்கள். விலகியிருந்த உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும்.

தனுசு: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். இழுபறியாக இருந்த வேலை முடியும். அழகு, இளமை கூடி பொலிவுடன் திகழ்வீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். 

மகரம்: வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பழைய கடன் பிரச்சினை கட்டுக்குள் வரும். யாரையும் அநாவசியமாகப் பகைத்துக் கெள்ளாதீர்கள்.

கும்பம்: வெளிவட்டாரத்தில் அலைச்சல் ஏற்படும். உறவினர்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்திடவோ, உத்தரவாதம் தரவோ வேண்டாம்.

மீனம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். வீட்டை புதுப்பிக்கத் திட்டமிடுவீர்கள். மற்றவர்களுக்காகச் செலவு செய்து பெருமைப்படுவீர்கள். நவீன கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close