[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 19 Sep, 2018 08:35 am
  • அ+ அ-

மேஷம்: பணவரவு உயரும். எதிர்ப்பு அகலும். கடன் பிரச்சினையிலிருந்து விடுபட கடுமையாக உழைப்பீர்கள். முகப்பொலிவு, ஆரோக்கியம் கூடும். விருந்தினர் வருகை உண்டு.

ரிஷபம்: செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். பயணங்கள் அதிகரிக்கும். அவ்வப்போது ஏற்படும் பணப்பற்றாக்குறையை சமாளித்து விடுவீர்கள். பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள்.

மிதுனம்: மனஇறுக்கம் குறையும். திட்டமிட்டுச் செயல்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

கடகம்: எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். கறாராகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். சேமிக்கும் அளவுக்கு வருவாய் அதிகரிக்கும். பழுதான சாதனங்களை மாற்றுவீர்கள்.

சிம்மம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். எதிர்பார்த்த விலைக்கு பழைய சொத்தை விற்பீர்கள். பெரிய மனிதர்கள், வெற்றி பெற்றவர்களின் நட்பு கிடைக்கும்.

கன்னி: மனதில் நிலவிய குழப்பங்கள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். நவீன கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.

துலாம்: புதியவர்கள் அறிமுகமாவார்கள். வரவேண்டிய பணமெல்லாம் கைக்கு வரும். வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும்.

விருச்சிகம்: நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தொகை வந்து சேரும். குடும்பத்தில் அமைதி, மகிழ்ச்சி பிறக்கும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். 

தனுசு: பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியது வரும். ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை காட்டுவது நல்லது. மற்றவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.

மகரம்: தவிர்க்க முடியாத செலவுகளும், பயணங்களும் வரும். உறவினர், நண்பர்களின் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். மனைவிவழி உறவினர்களால் நன்மை உண்டு.

கும்பம்: சுபநிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். நவீன ரக வாகனம் மற்றும் மின்சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். திடீர் பயணம் உண்டு.

மீனம்: கடின உழைப்பால் காரியங்களைச் சாதிப்பீர்கள். மனப்போராட்டங்கள் நீங்கி அமைதி நிலவும். சமயோசிதமான பேச்சால் தடைபட்ட வேலைகளை திறம்பட முடிப்பீர்கள். 

 

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close