[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • வி.ராம்ஜி
  • Posted: 18 Sep, 2018 09:40 am
  • அ+ அ-

மேஷம்: மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிலவிய கூச்சல், குழப்பம் விலகும். ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்து சேமிக்கத் தொடங்குவீர்கள். திடீர் பயணம் உண்டு.

ரிஷபம்: முன்கோபத்தால் பகை உண்டாகும். அசைவ, கார உணவுகளைத் தவிர்த்து விடுங்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வளைந்து கொடுத்துப் போவது நல்லது.

மிதுனம்: வேலை, வேலையென்று பரபரப்புடன் காணப்பட்ட நீங்கள் இன்று குடும்பத்தினருடன் மனம் விட்டுப்பேசுவீர்கள். அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். 

கடகம்: நீண்டநாள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். கணவன்  - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். தந்தையின் உடல்நிலை சீராக இருக்கும். வாகனப்பழுது நீங்கும்.

சிம்மம்: எதிர்ப்புகள், இழப்புகள், ஏமாற்றங்கள் நீங்கும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். சகோதரர்கள் தக்கசமயத்தில் உதவுவார்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.

கன்னி: சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்பட்டு காரியங்களை மளமளவென்று முடிப்பீர்கள்.  பேச்சில் கம்பீரம், தெளிவு பிறக்கும். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும்.

துலாம்: முகப்பொலிவு கூடி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். பால்ய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

விருச்சிகம்: வெளிப்படையான பேச்சால் காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். கணவன்  - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு.

தனுசு: வாகனம் தொந்தரவு தரும். மற்றவர்கள் விஷயத்தில் அநாவசியமாகத் தலையிட வேண்டாம். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடித்தபடியே இருக்கும்.

மகரம்: பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். நெருங்கியவரிடம் மனக்குறைகளைச் சொல்லி ஆதங்கப்படுவீர்கள். யாருக்காகவும் உத்தரவாதக் கையெழுத்திட வேண்டாம். 

கும்பம்: கல்யாண முயற்சி பலிதமாகும். உங்கள் ஆலோசனையை குடும்பத்தினர் ஏற்றுக் கொள்வார்கள். வாகனத்தைச் சீர் செய்வீர்கள். பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.  

மீனம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். சொந்தபந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். பிரபலங்களின் சந்திப்பு நிகழும். வாகனச் செலவுகள் குறையும்.

 

 

 

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close