[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 17 Sep, 2018 10:19 am
  • அ+ அ-

மேஷம்: தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுவீர்கள். சந்தர்ப்ப சூழ்நிலை அறிந்து பணியாற்றுவீர்கள். வீண் ஆடம்பரச் செலவுகளைக் கட்டுப்படுத்தி, சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். 

**

ரிஷபம்: சவாலான காரியங்களையும் சர்வ சாதாரணமாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். அடுக்கடுக்காக செலவுகள் வந்தாலும், அதற்கேற்ற வருமானமும் இருக்கும்.

**

மிதுனம்: நீங்கள் விரும்பிய புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் தேடி வரும். நம்பிக்கைக்கு உரியவர்களின் அறிமுகம் கிடைக்கும்.

**

கடகம்: செயலில் வேகம் கூடும். அரசு, வங்கி வகையில் ஆதாயம், அனுகூலம் உண்டாகும். விஐபிகள்உதவியுடன் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். பேச்சில் நிதானம் தேவை.

**

சிம்மம்: பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையைக் கேட்டு நடப்பார்கள். மகளுக்கு உடனே திருமணம் கூடிவரும். பல வகையிலும் பணவரவு உண்டாகும்.

**

கன்னி: கவுரவப் பதவிகள் தேடி வரும். மனைவி வழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். புது வேலை அமையும். அரசால் அனுகூலம் உண்டாகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

**

துலாம்: சவாலான காரியங்களையும் சாதுர்யமாக முடித்து வெற்றி பெறுவீர்கள். இடையூறுகள், தடைகள் யாவும் நீங்கும். இழுபறியாக இருக்கும் விஷயத்தில் முக்கிய முடிவு எடுப்பீர்கள்.

**

விருச்சிகம்: கைமாற்றாக, கடனாக வாங்கிய பணத்தை ஒருவழியாக திருப்பித் தருவீர்கள். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை உருவாகும்.

**

தனுசு: வேலைச்சுமை அதிகரிக்கும். தூங்க, ஓய்வெடுக்கக்கூட நேரம் கிடைக்காது. குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும். ஆன்மிகம், யோகா, தியானத்தில் ஈடுபாடு உண்டாகும்.

**

மகரம்: சுபச் செலவுகள் அடுத்தடுத்து வந்தபடி இருக்கும். விருந்தினர், உறவினர் வருகை அதிகரிக்கும்.எக்காரியத்திலும் நிதானம் அவசியம். யாரையும் எடுத்தெறிந்து பேசக்கூடாது.

**

கும்பம்: எடுத்த காரியத்தில் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் உண்டாகும். விஐபிகள், அதிகாரிகளின்நட்பும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

**

மீனம்: உங்கள் நிர்வாகத் திறன் அதிகரிக்கும். வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நல்ல சம்பளத்துடன்பெரிய நிறுவனத்தில் உத்யோகம் அமையும். எதிலும் பொறுமை தேவை.

 

 

 

 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close