[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 13 Sep, 2018 07:50 am
  • அ+ அ-

மேஷம்: சகோதரர் வகையில் நன்மை உண்டு. விலை உயர்ந்த மின்சாதனப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். மனைவிவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு.

ரிஷபம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வேற்றுமதத்தவர் நண்பர்களாவர்.

மிதுனம்: குடும்பத்தின் அடிப்படை வசதி பெருகும். நீண்டநாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். அக்கம்பக்கத்தினரின் ஆதரவு பெருகும். பிள்ளைகளால் பெருமையுண்டு.

கடகம்: பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்பு செலவு அதிகரிக்கும்.

சிம்மம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வாகனத்தைச் சீர் செய்வீர்கள்.

கன்னி: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். முகப்பொலிவு கூடும். உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். விருந்தினர் வருகை உண்டு.

துலாம்: குடும்பத்தாருடன் ஈகோ பிரச்சினை வந்து நீங்கும். கசப்பான அனுபவங்கள் நினைவுக்கு வரும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும்.

விருச்சிகம்: கணவன் - மனைவிக்குள் விவாதங்கள் வந்து போகும். திடீர் பயணம், செலவுகளால் திணறுவீர்கள். சாலைகளைக் கவனமாக கடந்து செல்லுங்கள். 

தனுசு: அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். பழைய சிக்கல்கள் தீரும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். குடும்பத்தாரின் ஆதரவு அதிகரிக்கும்.

மகரம்: பழைய உறவினர்கள், நண்பர்களைச் சந்திப்பீர்கள். வீடு, வாகனத்தைச் சீர் செய்வீர்கள். சிலர் உங்களை நம்பி சிலர் முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். ஆடை, ஆபரணம் சேரும்.

கும்பம்: மன உளைச்சல் நீங்கி தெளிவு பிறக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். தடைபட்ட வேலை வெற்றிகரமாக முடியும்.

மீனம்: உறவினர், நண்பர்களால் அன்புத் தொல்லைகள் உண்டு. இனந்தெரியாத சின்னச் சின்னக் கவலைகள் வந்து நீங்கும். அலட்சியப் போக்கைக் கைவிடுவது நல்லது.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close