[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 11 Sep, 2018 09:05 am
  • அ+ அ-

மேஷம்: புது முயற்சிகள் வெற்றி தரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணவரவு உண்டு. ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். விருந்தினர் வருகை உண்டு.

ரிஷபம்: உங்களின் வெளிப்படையான பேச்சை அனைவரும் ரசிப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

மிதுனம்: புதுப்பொலிவுடன் காணப்படுவீர்கள். கடன் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். தாய்வழி உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். முன்கோபம் விலகும். திடீர் பயணம் ஏற்படும்.

கடகம்: செயலில் வேகத்தைக் காட்டுவீர்கள். பிரபலமானவர்களைச் சந்திப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் நீண்டநாள் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள்.

சிம்மம்: முகமலர்ச்சியுடன் காணப்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பணப்பற்றாக்குறை நீங்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். 

கன்னி: எந்த காரியத்தைத் தொட்டாலும் பலமுறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். குடும்பத்தாரின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்பச் செயல்படுங்கள்.

துலாம்: தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். எதிர்பாராத திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள்.

விருச்சிகம்: தன்னம்பிக்கை பிறக்கும். தைரியமான முடிவுகள் எடுப்பீர்கள். வெளியூர்ப் பயணங்களால் மகிழ்ச்சியுண்டு. வருங்காலத் திட்டத்தைப் பற்றி நண்பர்களிடம் விவாதிப்பீர்கள்.

தனுசு: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பீர்கள். ஆன்மிகவாதிகளின் சந்திப்பு நிகழும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும்.

மகரம்: குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் - மனைவிக்குள் நிலவிய பனிப்போர் விலகும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். தேவைக்கேற்ற பணம் கைவசம் இருக்கும்.

கும்பம்: கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். சிலரின் தவறுகளைச் சுட்டிக் காட்டுவதன் மூலம் தேவையற்ற சச்சரவுகளில் சிக்குவீர்கள்.

மீனம்: கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். புண்ணியத் தலங்கள் சென்று வருவீர்கள்.

 

 

 

 

 

இதை மிஸ் பண்ணாதீங்க...

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close