[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 10 Sep, 2018 08:39 am
  • அ+ அ-

மேஷம்: நட்பால் ஆதாயம், அனுகூலம் உண்டு. நவீன சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

--

ரிஷபம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பழைய கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடு வந்து நீங்கும். எதிலும் பொறுமை அவசியம்.

--

மிதுனம்: குடும்பத்தினரின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப உங்களை மாற்றிக்கொள்வீர்கள். வெளியூரில் இருந்து நல்ல சேதி வரும். உறவினர்கள் பாராட்டுவார்கள்.

--

கடகம்: கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி, அன்யோன்யம் உண்டாகும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். புதியவருடன் நட்பு மலரும். வெளி வட்டாரத்தில் மதிப்பு கூடும்.

--

சிம்மம்: குடும்பத்தினருடன் இணக்கமாகச் செல்லவும். சிறு அவமானங்களை சந்திக்க நேரிடும்.வாக்குறுதிகளை நிறைவேற்றப் போராடுவீர்கள். உற்சாகம் அதிகரிக்கும்.

--

கன்னி: கணவன் - மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. உடன்பிறந்தவர்களால் வீண் செலவும்,மனக்கசப்பும் வந்து நீங்கும். ஆன்மிகம், தியானம், யோகாவில் ஈடுபாடு ஏற்படும்.

--

துலாம்: குடும்பத்தினரின் ஆதரவு பெருகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும்.நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். பல வகையிலும் பணவரவு உயரும்.

--

விருச்சிகம்: கோபத்தைக் கட்டுப்படுத்தி, உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வீடு, வாகனத்தை சரிசெய்வீர்கள். பேச்சில் நிதானம் தேவை.

--

தனுசு: விருந்தினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். பள்ளிப் பருவ நண்பர்கள், பழைய உறவுகளை சந்திப்பீர்கள்.

--

மகரம்: தாழ்வு மனப்பான்மைக்கு இடம்தராமல் நம்பிக்கையுடன் செயல்படுங்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிடாதீர்கள். இழுபறியாக இருக்கும் விஷயத்தில் முக்கிய முடிவு எடுப்பீர்கள்.

--

கும்பம்: மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். யோகா, தியானத்தில் நாட்டம் உண்டாகும். புதிய நபர் உதவுவார். புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். எதிலும் எச்சரிக்கை தேவை.

--

மீனம்: உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் தெரியும். பிள்ளைகளால் புகழ், கவுரவம் உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பும், அதனால் ஆதாயமும் கிடைக்கும்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close