[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 09 Sep, 2018 08:59 am
  • அ+ அ-

மேஷம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். பணவரவு திருப்தி தரும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். விருந்தினர் வருகை உண்டு.

ரிஷபம்: சிக்கனமாகச் செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அரசாங்க காரியங்களில் இருந்த பின்னடைவு நீங்கும். விடாப்பிடியாகச் செயல்பட்டு பணிகளை முடிப்பீர்கள்.

மிதுனம்: கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்வீர்கள். எடுத்த காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும்.

கடகம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசி அனைவரையும் ஆச்சரியப்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். திடீர் பயணம் உண்டு.

சிம்மம்: சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். உறவினர், நண்பர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். விமர்சனங்களைக் கண்டு அஞ்ச வேண்டாம்.

கன்னி: அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். உறவினர், நண்பர்களால் சங்கடங்கள் வரும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். மருத்துவச் செலவுகள் ஏற்படும்.

துலாம்: குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். பிள்ளைகளின் உடல்நிலை சீராக இருக்கும். பண வரவு சரளமாக இருக்கும். நண்பர்கள், சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும்.

விருச்சிகம்: அடிமனதில் இருந்துவந்த பயம் விலகும். துணிச்சலுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடு மறையும். பணவரவு திருப்தி தரும்.

தனுசு: உங்களின் குறிக்கோளை எட்டிப்பிடிக்க முயற்சிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். விருந்தினர்களின் திடீர் வருகையால் வீட்டில் சந்தோஷம் கிட்டும்.

மகரம்: எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டியது வரும். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங்கள். கோப்புகளைக் கையாளும்போது கவனம் தேவை.

கும்பம்: அதிரடியாக சில திட்டங்களைத் தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களைத் தேடிவந்து சிலர் உதவி கேட்பார்கள். பயணத்தால் ஆதாயம் உண்டு.

மீனம்: முகப்பொலிவு கூடும். அதிகாரப்பூர்வமாகச் செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள்.

வாக்களிக்கலாம் வாங்க

வடசென்னை படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close