[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


raasi-palan

  • kamadenu
  • Posted: 08 Sep, 2018 09:13 am
  • அ+ அ-

மேஷம்: பிரச்சினைகளை எதிர்கொண்டு சமாளிக்கும் மனோபலமும், வலிமையும் உண்டாகும். நெருங்கிய ரத்த பந்தங்கள், உறவினர்களுடன் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும்.

ரிஷபம்: குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை நிறைவேற்றுவீர்கள். வீட்டில் சுபநிகழ்ச்சிகளுக்கு ஏற்படாகும். ஊர்ப் பொதுப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பீர்கள்.

மிதுனம்: தேவைகளுக்கேற்ப பண வரவு இருக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். சகோதரர்களால் ஆதாயம் அடைவீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

கடகம்: வீட்டைப் புதுப்பிக்கத் திட்டமிடுவீர்கள். பிள்ளைகள் நீண்ட நாட்களாகக் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம், அமைதி நிலைக்கும். 

சிம்மம்: திடீர் பயணம், தூக்கமின்மை, வீண் செலவுகள் வந்து போகும். வீடுகட்ட கட்டிட அனுமதி அரசாங்கத்திடமிருந்து தாமதமாக கிடைக்கும். பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள்.

கன்னி: தங்க நகைகள் இரவல் வாங்கவோ, தரவோ வேண்டாம். புண்ணியத் தலங்களுக்குக் குடும்பத்துடன் சென்று வருவீர்கள். சகோதரரால் வீண் பிரச்சினைகள் வரக்கூடும்.

துலாம்: தொட்ட காரியங்கள் துலங்கும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். சகோதரர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். ஆடை, ஆபரணங்கள், கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.

விருச்சிகம்: சவாலான காரியங்களைக் கூட சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். உங்களிடம் மறைந்துக் கிடந்த திறமைகளெல்லாம் வெளிப்படும். விருந்தினர் வருகை உண்டு.

தனுசு: எதிர்பார்த்த உதவிகள் தாமதமின்றிக் கிடைக்கும். பிள்ளைகள் கல்வி அல்லது உத்தியோகத்தின் பொருட்டு அயல்நாடு அல்லது வெளிமாநிலம் செல்லும் வாய்ப்பு வரும்.

மகரம்: அடுத்தடுத்து செலவுகள் இருக்கும். பழைய நண்பர்கள், சொந்தபந்தங்களால் பிரச்சினைகளும், அவர்களுடன் கருத்துமோதல்களும், மனக்கசப்புகளும் ஏற்படக்கூடும். திடீர் பயணம் உண்டு.

கும்பம்: வீடு வாங்கும் யோகம் உண்டாகும். பழைய வாகனத்தை மாற்றி புது வாகனம் வாங்கி மகி்ழ்வீர்கள். வெளியூரில் இருந்து வரும் செய்திகள் மகிழ்ச்சியைத் தரும்.

மீனம்: வழக்கில் சாதகமானத் தீர்ப்பு வரும். முக்கிய விஷயங்கள் குறித்து சகோதரர்கள் உங்களிடம் கலந்தாலோசிப்பார்கள். பெற்றோரின் உடல்நிலை சீராகும். பண வரவு சரளமாக இருக்கும்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close