[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 07 Sep, 2018 08:50 am
  • அ+ அ-

மேஷம்: பழைய இனிய சம்பவங்களை அவ்வப்போது நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். கவுரவப் பதவிகள் தேடி வரும். நண்பர்கள், உறவினர்களின் வருகையால் வீடு களைகட்டும்.

ரிஷபம்:  மனோபலம் கூடும். தைரியமாகச் சில முடிவுகள் எடுப்பீர்கள். சுபநிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

மிதுனம்: புத்திசாலித்தனமாகச் செயல்படுவீர்கள். சமயோசித புத்தியைப் பயன்படுத்தி வெற்றி பெறுவீர்கள். பழைய நண்பர், உறவினர்கள் தேடிவந்து பேசுவார்கள். திடீர் பயணம் உண்டு.

கடகம்: தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். நண்பர்களுடன் எதிர்பாராத வகையில் பகை ஏற்படக்கூடும். இளைய சகோதரர் வகையில் இடையூறுகள் இருக்கும்.

சிம்மம்: திடீர் செலவுகள் ஏற்படும். சிலர் உங்களிடம் உதவி கேட்டால் அவர்கள் உண்மையிலேயே சிரமப்படுகிறார்களா என்பது விசாரித்து உதவுவது நல்லது. விருந்தினர் வருகை உண்டு.

கன்னி: வெளியூரில் இருந்து மகிழ்ச்சிகரமான செய்திகள் வரும். மூத்த சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும். எங்கு சென்றாலும் மதிப்பு, மரியாதையோடு நடத்தப்படுவீர்கள்.

துலாம்: உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பால்ய நண்பர்களால் ஆதாயம் உண்டு. குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

விருச்சிகம்: எதிலும் வெற்றி, லாபம் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். வீண் குழப்பங்களிலிருந்து விடுபடுவீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்து வேற்றுமை மறையும்.

தனுசு: சில நேரங்களில் கோபப்பட்டு, உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவீர்கள். எந்த ஒரு வேலையும் பலமுறை முயன்ற பின்னரே முடியும். யாருக்கும் உத்தரவாதம், ஜாமீன் தர வேண்டாம்.

மகரம்: உங்களின் அனுபவ அறிவை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். வீட்டை விரிவுப்படுத்தி கட்டுவீர்கள். குடும்ப வருமானம் உயரும். நவீன கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.

கும்பம்: தைரியம் பிறக்கும். ஓரளவு பணவரவு உண்டு. அரசு காரியங்கள் உடனே முடியும். வீடு, மனை வாங்குவது, விற்பது சுலபமாகவும், லாபகரமாகவும் இருக்கும்.

மீனம்: உங்களின் நிர்வாக, ஆளுமைத் திறன் அதிகரிக்கும். முக்கியப் பதவிக்கு ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். நீண்டநாட்களாக எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும்.

 

 

 

வாக்களிக்கலாம் வாங்க

வடசென்னை படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close