[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 06 Sep, 2018 09:08 am
  • அ+ அ-

மேஷம்: பால்ய நண்பர்கள் தக்கசமயத்தில் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்து போகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். திடீர் பயணம் உண்டு.

ரிஷபம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும்.

மிதுனம்: கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும்.

கடகம்: திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது வேறாகவும் இருக்கும். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள்.

சிம்மம்: எளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியங்கள்கூட இழுபறியில் போய் முடியும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். வீட்டை விரிவுபடுத்துவீர்கள்.

கன்னி: உங்களின் புது முயற்சிக்கு பெற்றோர் பக்கபலமாக இருப்பார்கள். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பழைய கடன் பிரச்சினை தீரும். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

துலாம்: மனைவிவழி உறவினர்களுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமணத் தடைகள் விலகும். அடிக்கடி பழுதான வாகனம் சரியாகும். பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள்.

விருச்சிகம்: பணவரவு அதிகரிக்கும். பழைய கடன் பிரச்சினையை தீர்க்க வழி பிறக்கும். சகோதரர் வகையில் சுபச் செலவு உண்டு. குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

தனுசு: வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும். வாயுக் கோளாறால் நெஞ்சுவலி வந்து போகும். உணவில் கட்டுப்பாடு அவசியம். எதிர்பார்த்த தொகை கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

மகரம்: அழகு, இளமை கூடும். சோர்வு நீங்கும். வாகனப் பழுது சரியாகும். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.

கும்பம்: தடைபட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வழக்கு சாதகமாகும்.

மீனம் முயற்சிகள் வெற்றியடையும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். கோபம் குறையும். பிரபலமானவர் அறிமுகமாவார். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.

 

 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close