[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • வி.ராம்ஜி
  • Posted: 05 Sep, 2018 08:40 am
  • அ+ அ-

மேஷம்: கம்பீரமாகப் பேசி காரியங்களை முடிப்பீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும். வாகனம் வாங்குவீர்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்ட முடிவெடுப்பீர்கள்.

ரிஷபம்: முகப்பொலிவு கூடும். உறவினர்களால் நன்மை உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நீண்டகாலச் சிக்கல்களைத் தீர்ப்பீர்கள். விருந்தினர் வருகை உண்டு.

மிதுனம்: சின்னச் சின்ன வேலைகளையும் அலைந்து முடிக்க வேண்டியது வரும். சகோதரர் வகையில் ஆரோக்கியமான செலவுகள் வரும். திடீரென உடல்நலம் பாதிக்கக் கூடும்.

கடகம்: எதிர்பார்ப்புகள் தாமதமாக முடியும். கடனைத் தீர்க்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.. உறவினர், நண்பர்களால் அலைச்சல், டென்ஷன் வந்து போகும். எதிர்பாராத பயணம் உண்டு.

சிம்மம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலைத் தீர்ப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வீடு, வாகனத்தைச் சீர் செய்வீர்கள்.

கன்னி: பிள்ளைகளின் நட்பு வட்டம் விரியும். சொத்துச் சிக்கல்கள் தீரும். நெருங்கியவர்களைச் சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும்.

துலாம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். 

விருச்சிகம்: சில வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது பிரச்சினையைத் தவிர்க்கும். அநாவசியச் செலவுகளை குறைக்கப் பாருங்கள். எதிர்பார்த்த உதவி தாமதமாகக் கிடைக்கும்.

தனுசு: கணவன் - மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள்.

மகரம்: எதிர்பாராத வகையில் பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் சிலர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.

கும்பம்: வருங்காலத் திட்டங்களில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். சிக்கனமாகச் செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். 

மீனம்: நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. நவீன கலைபொருட்கள் வாங்குவீர்கள்.

 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close