[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • வி.ராம்ஜி
  • Posted: 04 Sep, 2018 08:25 am
  • அ+ அ-

மேஷம்: மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசுக் காரியங்களில் வெற்றியுண்டு. நல்லவர்களின் நட்பு கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

ரிஷபம்: வெகுநாட்களாக குழப்பமாக இருந்துவந்த பிரச்சினைகளுக்கு இன்று முடிவு கட்டுவீர்கள். வாகனச் செலவு நீங்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.

மிதுனம்: மனதில் இனம்புரியாத பயம் வந்து போகும். குடும்பத்தினர் உங்களைப் புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்வார்கள். வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை.

கடகம்: மறைமுக விமர்சனங்களும், தாழ்வு மனப்பான்மையும் வந்து செல்லும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முயற்சியுங்கள். உடல் நலத்தில் கவனம் தேவை.

சிம்மம்: புது முயற்சிகள் வெற்றியடையும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு சுமுகமான தீர்வு கிடைக்கும். புண்ணியத் தலங்களுக்குக் குடும்பத்துடன் சென்று வருவீர்கள்.

கன்னி: எதார்த்தமாகப் பேசி அனைவரையும் வியக்க வைப்பதுடன் தடைபட்ட காரியங்களையும் விரைந்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் பிடிவாத குணத்தை ரசிப்பீர்கள். திடீர் பயணம் உண்டு.

துலாம்: மனக்குழப்பங்கள் விலகி தெளிவு பிறக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உடன்பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். பால்ய நண்பரை எதிர்பாராது சந்திப்பீர்கள்.

விருச்சிகம்: கடந்த காலத்தில் ஏற்பட்ட ஏமாற்றங்கள், சிறுசிறு அவமானங்களை நினைத்து வேதனை அடைவீர்கள். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.

தனுசு: வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். பிள்ளைகளின் உணர்வுக்கு மதிப்பளிப்பீர்கள். நவீன மின்சாதனங்கள் வாங்குவீர்கள்.

மகரம்: பிரியமானவர்களைக் கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சொந்தபந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும்.

கும்பம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். பணப் புழக்கம் சரளமாக இருக்கும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு.

மீனம்: தெளிவான முடிவுகளை எடுத்து உறவினர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தினரின் விருப்பத்தை உடனுக்குடன் பூர்த்தி செய்வீர்கள்.

 

 

 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close