[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 03 Sep, 2018 09:10 am
  • அ+ அ-

மேஷம்: எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். அரசு காரியங்களில் ஆர்வம் காட்டுவீர்கள்.

ரிஷபம்: கணவன் - மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து நீங்கும். யாரை நம்புவது என்ற குழப்பத்துக்கு ஆளாவீர்கள். நீங்கள் சாதாரணமாக சொல்வதுகூட பெரிய பிரச்சினையில் முடியும்.

மிதுனம்: வீண் விவாதங்கள் வேண்டாம். குடும்பத்தைப் பற்றிய கவலை வந்து நீங்கும். திடீர் பயணங்கள்,செலவுகளால் திணறுவீர்கள். பழைய பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண்பீர்கள்.

கடகம்: வெளியூரில் இருந்து நல்ல சேதி வரும். குடும்பத்தினருடன் கலந்துபேசி முக்கிய முடிவு எடுப்பீர்கள். வேலைச்சுமை, வீண் செலவுகள், அலைச்சல் குறையும்.

சிம்மம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சுற்றி இருப்பவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். வெளி வட்டாரத்தில் மரியாதை கூடும். நண்பர்களை சந்திப்பீர்கள்.

கன்னி: பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறை காட்டுவீர்கள். பிரியமானவர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வாகனத்தை சரிசெய்வீர்கள். பணவரவு உயரும்.

துலாம்: மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வயிற்றுக் கோளாறு வந்து நீங்கும். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். எதிர்பார்த்த பணம் சற்று தாமதமாகும்.

விருச்சிகம்: சாதுர்யமாக பேசி, கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். புது ரக ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வை பாராட்டுவீர்கள்.

தனுசு: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள். உறவினர்கள் பாராட்டுவார்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி நடந்து முடியும்.

மகரம்: மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீண், ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். நட்பு வட்டாரம் விரிவடையும். அரசு காரியங்கள் சாதகமாக முடியும்.

கும்பம்: சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு சுமுக தீர்வு காண்பீர்கள். ஓரளவு பணம் வரும். பழுதானவாகனத்தை சரிசெய்வீர்கள். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு.

மீனம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் பேச்சை ரசிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பணம் தந்து உதவுவர். அக்கம்பக்கத்தினரின் அன்புத்தொல்லை நீங்கும்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close