[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 02 Sep, 2018 09:08 am
  • அ+ அ-

மேஷம்: அலைச்சல்டென்ஷன்கோபம் யாவும் நீங்கி, குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் திரும்பும். இழுபறியாக இருந்த வேலைகள் விறுவிறுப்பாக நடந்து முடியும்.

ரிஷபம்: மறதியால் வீண் பிரச்சினைகள் வந்து நீங்கும். குடும்பத்தினரிடம் கோபத்தைக் காட்டாதீர்கள். விமர்சனங்களைக் கண்டு அஞ்சாதீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

மிதுனம்: சில வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கும். யாருக்கும் எந்த உறுதிமொழியும் தரவேண்டாம். பேச்சில் பொறுமை தேவை.

கடகம்: குடும்பத்தினருடன் மனம்விட்டுப்பேசுவீர்கள். நம்பிக்கைக்கு உரியவர்களை கலந்துபேசி முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பணவரவு, பொருள் வரவு கூடும்.

சிம்மம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகளை புதிய பாதையில் வழிநடத்துவீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள்.

கன்னி: கணவன் மனைவிக்குள் இருந்தபனிப்போர் நீங்கி அன்யோன்யம் உண்டாகும். புதியவர்களுடன் நட்பு மலரும். நெருங்கியவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

துலாம்: செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தினரின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயல்படுங்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள்.

விருச்சிகம்உங்கள் பலம், பலவீனத்தை உணர்ந்து செயல்படுவீர்கள். சகோதர உறவுகளால் பயனடைவீர்கள். திருமணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும்.

தனுசு: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்று நடப்பார்கள்.வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில்சாதகமான திருப்பம் உண்டாகும்.

மகரம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகள் பெருகும். உறவினர்களில் உண்மையானவர்களைக் கண்டறிவீர்கள்.வீண் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.

கும்பம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பெற்றோருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். பரிசுப் பொருட்கள், கலைப் பொருட்கள் வாங்குவீர்கள்.

மீனம்: துணிச்சலாக செயல்பட்டு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பிரபலங்களின் அறிமுகத்தால் ஆதாயம் உண்டு.

 

 

வாக்களிக்கலாம் வாங்க

வடசென்னை படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close