[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


raasi-palan

  • கா. இசக்கிமுத்து
  • Posted: 01 Sep, 2018 09:48 am
  • அ+ அ-

மேஷம்: ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களைப் பலமுறை அலைந்து முடிப்பீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். திடீர் பயணம் உண்டு.

ரிஷபம்:  யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்திடவோ, உத்தரவாதம் தரவோ வேண்டாம். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும்.

மிதுனம்: நீண்ட நாட்களாகத் தள்ளிப்போன காரியங்கள் முடியும். கொடுக்கல் - வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். ஆடை, ஆபரணம் சேரும்.

கடகம்: எதிர்பார்ப்புகள் தடங்கலின்றி நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும்.

சிம்மம்: தெளிவான முடிவுகளால் பணிகள் விறுவிறுவென நடைபெறும். குடும்பத்தாரின் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளின் உடல்நிலை சீராக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

கன்னி: உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். முன்கோபத்தைக் குறையுங்கள். உங்களுடைய பலம், பலவீனத்தை உணர்ந்து செயல்படுவது நல்லது.

துலாம்: குடும்பத்தினருடன் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். பிரார்த்தனைகள் நிறைவேறும்.

விருச்சிகம்: மனதில் நிலவிய குழப்பங்களுக்குத் தீர்வு கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் களைகட்டும்.

தனுசு: குடும்பத்தில் அமைதி, மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். சோம்பல், உடல் அசதி நீங்கும். ஆடம்பரச் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள்.

மகரம்: பரபரப்புடன் காணப்படுவீர்கள். வீண் ஆடம்பரம் இன்றி எளிமையாக வாழ விரும்புவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள்.

கும்பம்: கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். பணப்புழக்கம் சரளமாக இருக்கும். கடன் பிரச்சினை தீரும்.

மீனம்: பணப்பற்றாக்குறை நீங்கும். குடும்பத்தினர் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து யோசிப்பீர்கள். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close