[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 31 Aug, 2018 10:01 am
  • அ+ அ-

ரிஷபம்: கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து போகும். சகோதரர் வகையில் ஆரோக்கியமான விவாதங்கள் வரும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

மிதுனம்: உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். வாகன வசதி பெருகும். பழைய கடன் பிரச்சினை கட்டுக்குள் வரும். பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள்.

கடகம்: வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். உதவி கேட்டு வருபவர்களுக்கு உங்களால் இயன்றதைச் செய்து கொடுப்பீர்கள். கடனில் ஒரு பகுதியைப் பைசல் செய்வீர்கள்.

சிம்மம்: காரியங்களை நிறைவேற்றுவதில் இருந்த தடைகள் விலகும். தந்தையின் உடல்நிலை சீராகும். சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும்.

கன்னி: முன்கோபத்தால் பகை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். திடீர் பயணம் ஏற்படலாம்

துலாம்: மனதில் பட்டதைப் பளிச்சென்று பேசி அனைவரையும் கவர்ந்து விடுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தொடர்பு விரிவடையும்.

விருச்சிகம்: பிள்ளைகளின் உடல்நிலை சீராக இருக்கும். சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும். அக்கம்பக்கத்து வீட்டாரின் அன்புத்தொல்லைகள் விலகும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

தனுசு: துணிச்சலுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவீர்கள். பணவரவு திருப்தி தரும். வழக்கு சாதகமாகும்.

மகரம்: பிள்ளைகளின் மன நிலையைத் தெரிந்து கொள்வீர்கள். விருந்தினர்களின் திடீர் வருகையால் வீட்டில் சந்தோஷம் கிட்டும். நவீன கலைபொருட்கள், ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

கும்பம்: அதிரடியாக சில திட்டங்களைத் தீட்டுவீர்கள். விலகியிருந்த நண்பர்கள், உறவினர்கள் உங்களைத் தேடிவந்து உதவி கேட்பார்கள். வெளியூர்ப் பயணங்களால் ஆதாயம் உண்டு.

மீனம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வீண் ஆடம்பரச் செலவுகளைத் தவிர்ப்பீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும்.


Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close