[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 30 Aug, 2018 09:12 am
  • அ+ அ-

மேஷம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். நவீன மின்சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரியங்களால் செலவுகள் அதிகரிக்கும்.

ரிஷபம்: செயலில் வேகம் கூடும். கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த பனிப்போர் மறையும். விலையுயர்ந்த ஆடை ஆபரணங்கள் சேரும். வீடு வாங்க வங்கிக் கடன் கிடைக்கும்.

மிதுனம்: இழுபறியாக இருந்த வேலைகள் திடீரென முடியும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். புது வீடு வாங்கும் நடவடிக்கையில் இறங்குவீர்கள்.

கடகம்: எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பழைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கு ஏற்பாடாகும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள்.

சிம்மம்: வேலைச்சுமை, டென்ஷன், நண்பர்களுடன் கருத்துமோதல் வரக் கூடும். அரசு விவகாரங்களில் அவசரம் வேண்டாம். சொந்தபந்தங்களின் அன்புத்தொல்லை அதிகமாகும். 

கன்னி: குடும்பத்தில் அமைதி, சந்தோஷம் நிலைக்கும். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. பணப்புழக்கம் அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். 

துலாம்: தன்னம்பிக்கை துளிர்விடும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடாகும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்-. பிள்ளைகளின் தவறுகளைச் சுட்டிக் காட்டித் திருத்துவீர்கள்.

விருச்சிகம்: திட்டமிட்டக் காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். கணவன் - மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். பணவரவு திருப்தி தரும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். 

தனுசு: விலகியிருந்த பழைய உறவினர்கள் தேடிவந்துப் பேசுவார்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். தாயாருடன் கருத்துமோதல்கள் ஏற்படக் கூடும். 

மகரம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. பணத் தட்டுப்பாட்டைச் சமாளிப்பீர்கள்.

கும்பம்: புத்திசாலித்தனம் வெளிப்படும். பழைய பிரச்சினைகளை சுமுகமாகப் பேசி முடிப்பீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். நவீன கலைபொருட்கள் வாங்குவீர்கள்.

மீனம்: மற்றவர்களை நம்பி புதிய முயற்சிகளில் இறங்க வேண்டாம். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். அக்கம்பக்கத்து வீட்டாரின் அன்புத்தொல்லை இருக்கும்.

 

 


போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close