[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 29 Aug, 2018 09:22 am
  • அ+ அ-

மேஷம் : வீண் அலைச்சல் இருக்கும். முன்கோபத்தைத் தவிர்ப்பது நல்லது. சில காரியங்கள் தடை, தாமதத்துக்குப் பின்னர் நிறைவேறும். வீடு, வாகன பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

ரிஷபம் : வீட்டுக்குத் தேவையான மின் சாதனங்களை வாங்குவீர்கள். நண்பர்கள், உறவினர்களின் ஆதரவு உண்டு. தாய்வழி உறவினர்களுடன் சுமுகமான நிலை காணப்படும்.

மிதுனம் : மறைமுக எதிர்ப்புகள் விலகும். அரசாங்க அதிகாரிகளின் ஆலோசனைப்படி சொத்துப் பிரச்சினைகளைத் தீர்ப்பீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும். திடீர் பயணம் உண்டு.

கடகம் : தாமதமாகிக் கொண்டிருந்த சில காரியங்கள் நிறைவேறும். பிரபலமானவர்களின் ஆதரவு கிட்டும். கணவன் மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும்.

சிம்மம் : அலைச்சல், பணத்தட்டுப்பாடு ஏற்படக்கூடும். அரசு காரியங்களில் அலட்சியம் வேண்டாம். எதிர்பாராத மருத்துவச் செலவுகள், வீண்பழிகள் வரக்கூடும் என்பதால் கவனம் தேவை.

கன்னி : பால்ய நண்பர்களால் திடீர் திருப்பம் ஏற்படும். சேமிக்கும் அளவுக்கு பணவரவு சரளமாக உண்டு. பிள்ளைகள் விரும்பியபடி புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கித் தருவீர்கள்.

துலாம் : பிரபலங்களின் நட்பு கிட்டும். நீண்டநாட்களாக விலகியிருந்த சகோதர சகோதரிகள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும்.

விருச்சிகம் : எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவி, ஆலோசனை கிடைக்கும். வீண் குழப்பங்கள் நீங்கும். பிரபலங்களின் ஆதரவும் உண்டு. பணவரவு திருப்தி தரும்.

தனுசு : அரசு காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். பால்ய நண்பர்கள் தேடி வருவார்கள். அக்கம்பக்கத்து வீட்டாருடன் வரம்புக்கு மீறி உரிமை எடுத்துக் கொள்ளாதீர்கள்.

மகரம் : நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். மூத்த சகோதரர் வகையில் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும். திடீர் பயணம் உண்டு.

கும்பம் : புது முயற்சிகள் வெற்றியடையும். நட்பு வட்டாரம் விரிவடையும். தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வரவேண்டிய பணம் கைக்கு வரும். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.

மீனம் : எந்தக் காரியத்தையும் திட்டமிட்டுச் செய்வது நல்லது. குடும்பத்தாருடன் வீண் வாக்குவாதம் வேண்டாம். அடுத்தவர் மனம் காயப்படும்படி பேசாதீர்கள். விருந்தினர் வருகை உண்டு.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close