[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 28 Aug, 2018 09:35 am
  • அ+ அ-

மேஷம்: வேலைகள் தடங்கலுக்குப் பிறகு முடியும். பிள்ளைகளிடம் கோபத்தைக் காட்ட வேண்டாம். அநாவசியச் செலவுகளைத் தவிர்க்கப் பாருங்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும்.

ரிஷபம்: பிரச்சினைகளின் ஆணிவேரைக் கண்டறிவீர்கள். சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகாரப் பதவிகளில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். திடீர் பயணம் உண்டு.

மிதுனம்: பிள்ளைகளால் வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வாகனத்தைச் சரி செய்வீர்கள். புண்ணியத் தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும்.

கடகம்: குடும்பத்தில் அமைதி திரும்பும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள். நினைத்த காரியங்கள் தடைகளின்றி முடியும். 

சிம்மம்: முக்கிய முடிவுகளை தவிர்க்கப் பாருங்கள். எளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியங்கள்கூட இழுபறியில் போய் முடியும். பெற்றோருடன் வாக்குவாதங்கள் வரக்கூடும்.

கன்னி: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள்.

துலாம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் அனுகூலமும் உண்டு. நீண்டநாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள்.

விருச்சிகம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர்கள் தேடிவந்து பேசுவார்கள். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வழக்கில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும்.

தனுசு: பழைய சிக்கல்கள் தீரும். தாய்வழி உறவுகளுடன் கருத்துமோதல் வரக்கூடும். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

மகரம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் குடும்பச் சூழ்நிலையறிந்து பொறுப்பாக நடந்து கொள்வார்கள். வாகன வசதிப் பெருகும். நவீன கலைபொருட்கள் வாங்குவீர்கள்.

கும்பம்: உறவினர்கள், நண்பர்கள் வீட்டு விசேஷங்களில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் நட்பு கிட்டும். பண வரவு திருப்தி தரும்.

மீனம்: முக்கிய காரியங்களை உங்களது மேற்பார்வையில் முடிப்பது நல்லது. புதிய முயற்சிகள் தள்ளிப்போய் முடியும். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. 

 

 

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close