[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 26 Aug, 2018 09:10 am
  • அ+ அ-

மேஷம்: எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். புது பொறுப்புகள் ஏற்பீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும்.

ரிஷபம்: கடந்தகால இனிய அனுபவங்களெல்லாம் மனதில் நிழலாடும். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும்.

மிதுன:ம் குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பாதியில் நின்ற வேலைகள் திடீரென முடியும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

கடகம்: சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சுக்கும் ஆளாகக் கூடும். பிள்ளைகளிடம் கோபத்தைக் காட்ட வேண்டாம். பண விஷயத்தில் சாதுர்யமாகப் பேசி சமாளிப்பீர்கள்.

சிம்மம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டாகும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். பால்ய நண்பரைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

கன்னி: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.

துலாம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களைக் கண்டறிவீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

விருச்சிகம்: திட்டமிட்டக் காரியங்களை முடிப்பீர்கள். தாய்வழி உறவினரால் அலைச்சல் ஏற்படும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவு வந்து போகும். கடனைத் தீர்க்க முயற்சிப்பீர்கள்.

தனுசு: துணிச்சலாகச் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். மனைவிவழியில் அந்தஸ்து உயரும். மனதுக்கு இதமான செய்தி வரும்.

மகரம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். கடனாகக் கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள்.

கும்பம்: வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்வீர்கள். உறவினர், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடப்பார்கள்.

மீனம்: கணவன் - மனைவிக்குள் எதிர்பாராத வகையில் மனஸ்தாபம் வந்து நீங்கும். யாரையும் மனம் நோகும்படி பேசாதீர்கள். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close