[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 25 Aug, 2018 08:37 am
  • அ+ அ-

மேஷம்: பேச்சில் கம்பீரம் பிறக்கும். காரியங்களைக் கையாள்வதில் அனுபவ அறிவு வெளிப்படும். உங்களின் அணுகுமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் மற்றவர்களை அதிசயிக்க வைக்கும்.

ரிஷபம்: தைரியமாகச் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். மனோபலம் அதிகரிக்கும். அழகு, ஆரோக்கியம் கூடி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.

மிதுனம்: வீடு, வாகனப் பராமரிப்புச் செலவு அதிகரிக்கும். விலை உயர்ந்தப் பொருட்களைக் கவனமாக கையாளுங்கள். நண்பர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம்.

கடகம்: எத்தகைய பிரச்சினைகளையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவம் கிடைக்கும். நல்லவர்களின் ஆதரவாலும், ஆலோசனையாலும் சிக்கல்களை முறியடித்து வெற்றி காண்பீர்கள்.

சிம்மம்: இழுபறியாக இருந்த விஷயங்கள் உடனே முடியும். வீடு, மனை வாங்க முன்பணம் தருவீர்கள். சொத்துப் பிரச்சினை, வழக்குகளில் உங்களுக்கு சாதகமான நிலை காணப்படும்.

கன்னி: அடிமனதில் இருந்துவந்த பய உணர்வு நீங்கும். தடைகள் விலகும். சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உங்களின் முயற்சிகளுக்கு பிரபலமானவர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.

துலாம்: பால்ய நண்பரின் எதிர்பாராத சந்திப்பால் உற்சாகமடைவீர்கள். சொந்தபந்தங்களின் சுயரூபத்தைத் தெரிந்து கொண்டு அதற்கேற்பச் செயல்படுவீர்கள். திடீர் பயணம் உண்டு.

விருச்சிகம்: தொட்ட காரியங்கள் துலங்கும். சகோதரர் வகையில் உதவிகள் உண்டு. தள்ளிப் போன திருமணம் கூடி வரும். பழைய இடத்தை விற்று, நவீன வசதிகளுடன் புதுவீடு வாங்குவீர்கள்.

தனுசு: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். அழகு, இளமை கூடும். சகிப்புத் தன்மை அதிகரிக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

மகரம்: யாருக்கும், எதற்காகவும் உறுதிமொழி தரவேண்டாம். பொதுக் காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆனாலும் சிலர் உங்களைக் குறைகூறிக் கொண்டிருப்பார்கள்.

கும்பம்: அரசு அதிகாரிகள் உதவிகரமாக இருப்பார்கள். திடீர் பயணங்கள் வரும். புண்ணியத் தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

மீனம்: தன்னம்பிக்கை உண்டாகும். புகழ் பெற்ற புண்ணிய தலங்களுக்குச் சென்று நேர்த்திக் கடனைச் செலுத்துவீர்கள். பழைய நண்பர்கள், உறவினர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.


போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close