[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • வி.ராம்ஜி
  • Posted: 24 Aug, 2018 06:08 am
  • அ+ அ-

மேஷம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். நண்பர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். 

ரிஷபம்: சாதுர்யமான பேச்சால் சில காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.

மிதுனம்: சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசியச் செலவுகள் அடுத்தடுத்து ஏற்படும். சொந்தபந்தங்களால் அன்புத் தொல்லைகள் உண்டு.

கடகம்: மனசாட்சிக்கு விரோதமின்றி செயல்பட வேண்டுமென நினைப்பீர்கள். விருந்தினர்களின் திடீர் வருகையால் கலகலப்பான சூழல் ஏற்படும். ஆடம்பரச் செலவுகளைத் தவிர்ப்பீர்கள்.

சிம்மம்: சகோதரரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வாகனத்தைச் சீர் செய்வீர்கள்.

கன்னி: புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தினரின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆடை, ஆபரணம் சேரும்.

துலாம்: மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசுக் காரியங்களில் வெற்றியுண்டு. நல்லவர்களின் நட்பு கிடைக்கும். பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள்.

விருச்சிகம்: வெகுநாட்களாக நீடித்த பிரச்சினைகளுக்கு முடிவுகட்டுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் உடல்நிலை சீராக இருக்கும்.

தனுசு: மனநிறைவுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தினர் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். பிள்ளைகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். சகோதர, சகோதரிகளால் நன்மையுண்டு.

மகரம்: பல வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டியது வரும். பிள்ளைகளால் டென்ஷன் ஏற்படும். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் உள்ளதா என பார்த்துக் கொள்ளுங்கள்.

கும்பம்: ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நல்லது. மறைமுகப்போட்டிகளைச் சமாளிப்பீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்படும். விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியுண்டு.

மீனம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். பேச்சில் கம்பீரம் தெரியும். சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும்.

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close