[X] Close

ரெடியா இருங்க... உங்க வீட்டுக்கு லக்ஷ்மி வரப்போறா!  நாளை 24ம் தேதி வரலக்ஷ்மி விரதம்! 


varalakshmi-pooja

வரலக்ஷ்மி பூஜை

  • வி.ராம்ஜி
  • Posted: 23 Aug, 2018 17:46 pm
  • அ+ அ-

பண்டிகைகளும் பூஜைகளும் வரங்கள் பெற்று, வளமுடன் வாழ்வதற்குத்தான் வாழ்வுடன் வாழ்வாக அமைக்கப்பட்டிருக்கின்றன. விரதங்களும் வழிபாடுகளும் செய்யச் செய்ய, மனம் தூய்மையாகும். இல்லத்தில் அமைதி தவழும். தூய்மையும் அமைதியும் சந்தோஷத்தின் ஆரம்பம். சகல செல்வங்களுடனும் தாலிபாக்கியத்துடனும் வாழலாம். அப்படியான முக்கியமான விரதம்... சிறப்பானதொரு பூஜை... வரலக்ஷ்மி பூஜை. 
இதோ... நாளைய தினம் 24ம் தேதி வெள்ளிக்கிழமை, வரலக்ஷ்மி பூஜை. ஆத்மார்த்தமாக எந்த வீட்டில் இந்த பூஜை செய்யப்படுகிறதோ... அந்த வீட்டுக்கு லக்ஷ்மி வருவாள் என்பது சத்தியவார்த்தை! 
 ஆவணி மாதத்தில், பௌர்ணமிக்கு முன்னதாக வருகிற வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி பூஜை செய்யவேண்டும். மிக எளிமையான விரதம் இது. ஆடம்பரமில்லாத பண்டிகை இது.  பொருட்செலவு அதிகம் தராத, அற்புதமான பூஜை என்கிறார்கள் ஆச்சார்யப்பெருமக்கள். 
 அன்றைய நாளில், காலையில் எழுந்தது முதல் உணவு எடுத்துக் கொள்ளாமல் விரதம் மேற்கொள்ளவேண்டும். மாலை வேளையில், சூரிய அஸ்தமனம் நெருங்கும் வேளையில்,  கலசத்தில் ஸ்ரீவரலட்சுமிதேவியை ஆவாஹனம் செய்யவேண்டும். முன்னதாக, வீட்டு பூஜையறையை அலங்கரியுங்கள். ஸ்வாமி படங்கள் அனைத்தையும் துடைத்து, புதிதாக சந்தனம் & குங்குமம் இடுங்கள். பூஜை செய்யும் இடத்தில், அதாவது கலசம் வைக்கும் இடம் எதுவோ அங்கே கோலமிடுங்கள். அதன் மேல் கலசத்தை வையுங்கள். .
 தேவியை ஆவாஹனம் செய்து, பூஜைகள் செய்து, நைவேத்தியமாக பாயசம், சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்யலாம். பூஜை முடிந்ததும், பூஜை செய்த பெண்கள் தங்கள் வலதுகையில் ரக்ஷை எனப்படும் கயிறைக் கட்டிக் கொள்ளவேண்டும். கலசத்தை நமஸ்கரிக்கவேண்டும். இதனால், தீர்க்கசுமங்கலியாக வாழலாம் என்பது உறுதி. உங்கள் வீட்டில் லக்ஷ்மி வாசம் செய்யத்தொடங்குவாள் என்பது சத்தியம்! 
.
 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close