[X] Close

ஒரு தயிர்சாதப் பொட்டலம் தரலாமா? இன்று குருவார பிரதோஷம்!


guruvaara-piradhosham

திருப்பட்டூர் நந்தியம்பெருமான்

  • வி.ராம்ஜி
  • Posted: 23 Aug, 2018 09:21 am
  • அ+ அ-

ஆவணி மாதத்தின் பிரதோஷம், பல அற்புதங்களைத் தந்தருளக் கூடியது. அதிலும் குருவாரம் எனப்படும் வியாழக்கிழமையில் பிரதோஷம் வருவது, இன்னும் மகத்துவம் வாய்ந்தது. எனவே இந்த குருவார பிரதோஷ நன்னாளில், சிவாலயம் செல்லுங்கள். சிவனாரைத் தரிசியுங்கள். நந்திதேவரை வணங்கி வழிபடுங்கள். எல்லா துர்சக்திகளும் விலகி, நல்லனவெல்லாம் கிடைக்கப்பெறுவீர்கள். இன்று 23.8.18 குரு வாரம் எனப்படும் வியாழக்கிழமை நாளில், வந்துள்ளது பிரதோஷம்!

பிரதோஷ பூஜையை தரிசிப்பதும் அப்போது சிவனாரை மனமொன்றிப் பிரார்த்தனை செய்வதும் விசேஷம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். மிகுந்த நன்மைகளை வாரிவழங்கக் கூடியது என்கிறார்கள்.

குறிப்பாக, ஆவணி மாதத்தில், குருவாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமையில் பிரதோஷம் வருவது ரொம்பவே சிறப்பு வாய்ந்தது. இந்த நாளில், மாலைவேளையில், அருகில் உள்ள சிவாலயத்திற்குச் செல்லுங்கள். நந்திதேவர், சிவபெருமான், குருவாரம் என்பதால் நவக்கிரகத்தில் உள்ள குரு பகவான், கோஷ்டத்தில் உள்ள குரு தட்சிணாமூர்த்தி முதலானோரை கண்ணாரத் தரிசியுங்கள். மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள்.

மாலை 4.30 முதல் 6 மணி வரை என்பது பிரதோஷ நேரம். இந்த சமயத்தில், சிவாலயத்தில் உள்ள நந்திதேவருக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடைபெறும். முடிந்தால், சந்தனம், பால், தயிர், திரவியப் பொடி, பன்னீர், தேன் முதலான அபிஷேகப் பொருட்களை வழங்கி தரிசியுங்கள். அதேபோல், செவ்வரளி, வில்வம், அருகம்புல் கொண்டு நந்திதேவருக்குச் சார்த்தி வேண்டிக் கொள்ளுங்கள்.

குருவார பிரதோஷத்தில் மறக்காமல் தென்னாடுடைய சிவனாரைத் தரிசனம் செய்யுங்கள். அபிஷேகப் பொருட்களும் பூக்களும் வழங்குங்கள். இன்னும் இயலுமெனில், தயிர்சாதம் விநியோகம் செய்யுங்கள். உங்கள் வாழ்க்கையையே குளிரச் செய்துவிடுவார் ஈசன்!

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close